விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வெயிட்...வெயிட்..இந்த நியூஸ் பீஸ்ட் படத்தோட அப்டேட் இல்லை. விஜய்யின் 66 வது படத்தின் சில முக்கியமான தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம். இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66 வது படத்தில் நடிக்கவுள்ளார்.கார்த்தி நடிப்பில் வெளியான தோழா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி. இந்த நிலையில் விஜய் படத்தை வம்சி இயக்க போகிறார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகி வெளியாகி , விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்த நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியுள்ளது. விஜய் 66 படம் பைலிங்குவலாக , அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். அது உறுதியானால் விஜய் நடிக்கும் முதல் பைலிங்குவல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் விஜய் 66 , செண்டிமெண்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. .முன்னதாக படம் குறித்து பேசிய இயக்குநர் வம்சி “படத்தில் மனித உறவுகள் மற்றும் , உணர்ச்சிகள் இரண்டிற்கு இடமளித்து கதையை உருவாக்கியுள்ளேன். மேலும் விஜய் சாரின் ரசிகர்கள் மற்றும் அவரின் ஸ்டார் வேல்யூவையும் மனதில் வைத்துதான் கதை எழுதியிருக்கிறேன் “ என தெரிவித்திருந்தார். அது தற்போது வெளியாகியுள்ள தகவலை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.இயக்குநர் வம்சி ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வித்தை தெரிந்தவர் என்பதால் செண்டிமெண்ட் மசாலா தூக்கலாக படம் உருவாகும் என்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. விஜய் 66 படத்தின் பூஜை கூட இன்னும் தொடங்கவில்லை அதற்குள்ளாக படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்ற பெரிய நிறுவனங்களுக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டி நிலவுகிறதாம்.இந்த நிலையில் பிரபல zee நிறுவனம் அதற்கான உரிமையை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.