மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் தளபதி 65. இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இந்த படத்தை இயக்குகிறார். சில தினங்களுக்கு முன்புதான் படப்பூஜை நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்குக்காக அனைவரும் ஜார்ஜியா சென்றிருந்தனர் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்டாக இருந்தது.
இந்நிலையில், ஜார்ஜியாவில் குளிர் மழை பொழிந்துவருவதால் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் தாமதமாகி வருவதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பை இன்னும் இரண்டு வாரத்திற்குள் முடித்துவிட்டு ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பப்போகிறது படக்குழு .சிறிய ஓய்வுக்கு பிறகு இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது . சென்னையில் பூஜா மற்றும் விஜயின் பாடல் ஒன்று எடுக்கப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார் காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி சண்டை காட்சிகளுடன் படம் தயாராகிறது .