சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173 ஆவது படத்தை சுந்தர் சி இயக்கவிருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். ரஜினியுடன் முன்னதாக அருணாச்சலம் படத்தில் பணியாற்றியிருக்கிறார் சுந்தர் சி. இப்படத்தை இயக்கும் இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது பற்றியும் ரஜினியுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பற்றியும் சுந்தர் சி சில நேர்காணல்களில் பேசியுள்ளார். அதில் சில வீடியோக்கள் தற்போது மீண்டும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன
அருணாச்சல் டைட்டிலை கேட்டு ஷாக் ஆன சுந்தர் சி
அருணாச்சலம் டைட்டில் உருவான விதம் பற்றி பேசிய சுந்தர் சி "அருணாச்சலம் படத்திற்கு முதலில் நாங்கள் வைத்திருந்த டைட்டில் குபேரன். பொதுவாக ரஜினி படத்தின் டைட்டிலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்போது நாங்கள் வைத்திருந்த குபேரன் டைட்டில் எப்படியோ கசிந்துவிட்டது. அதனால் அந்த டைட்டிலை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படத்திற்கான டைட்டிலை நானும் ரஜினி சாரும் ரொம்ப நாள் விவாதித்தோம். ஒரு நாள் ரஜினி படத்திற்கான டைட்டிலை பிடித்துவிட்டேன் உடனே வீட்டுக்கு வாங்க என்று சொன்னார். அங்கு போனபோது ரஜினிக்கு ரொம்ப நெருக்கமானவர் ஒருத்தர் இருந்தார். அவர் அருணாச்சலம் என்று படத்தின் டைட்டிலை சொன்னபோது எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. ரஜினி சாரிடம் டைட்டில் நல்ல இல்லை என்று சொல்லிலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். ரஜினி சார் வந்தது டைட்டில் என்ன சார் என்று கேட்டேன். அருணாச்சலம் என்று அவர் சொன்னதும் சார் சூப்பர் என்று சொல்லிவிட்டேன். அந்த டைட்டிலை அவர் சொல்லும் போது அது சூப்பராக இருந்தது. "
இளம் இயக்குநர் நான் தான்
"ரஜினி சார் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததே ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. நான் சின்ன வயதில் இருந்து பார்த்து ரசித்த ஒரு மனிதருக்கு கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்ததே ஒரு பெரிய அபூர்வம். அதுவும் என்ன மாதிரி ஒரு இளம் இயக்குநர். எனக்கு தெரிந்து இன்று வரை ரஜினி சார் பணியாற்றியதிலேயே இளம் இயக்குநர் நான் தான் என்று நினைக்கிறேன். அதுவும் இல்லாமல் ரஜினிக்கு இளம் இயக்குநர்களுடன் பணியாற்றுவது பிடிக்கும். அப்போது அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. எனக்கு கிடையாது. ஆனால் எங்கள் கேமராமேன் சிகரெட் பிடிப்பார். அவர் சிகரெட் அடிக்கப் போனால் ரஜினி கூப்பிட்டு அவருக்கு சிக்ரெட் கொடுத்து இருவரும் சேர்ந்து அடிப்பார்கள். " என கூறியுள்ளார்.