ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய படத்தை நெல்சன் இயக்குவது சமீபத்தில் உறுதியானது. 


ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியானது.  படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து, மீம்ஸ்கள் ரஜினியை நோக்கி பாய்ந்தன. வேண்டாம் தலைவா விபரீதம் என பலரும் கருத்து பதிவிட்டனர். ஒரு படத்தின் தோல்வியை வைத்தே அடுத்த படத்தின் வெற்றியை தீர்மானிப்பது சரியல்ல என்றும், தோல்வி கொடுத்த எத்தனையோ இயக்குநர்கள் அடுத்தபடத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தும் இருக்கிறார்கள் என நெல்சனுக்கு ஆதரவு குரல்கள் கிளம்பின. 






அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை என்றாலும் பீஸ்ட் படத்தை ரஜினி பார்த்ததாகவே நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டு சொல்லின. முழு படத்தையும் பார்த்த ரஜினி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ எதுவுமே சொல்லவில்லை என்றும் அமைதியை மட்டுமே கொடுத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. 


நெல்சனுக்கு பீஸ்ட் ஒரு மிகப்பெரிய மைனஸை உண்டாக்கினாலும், ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளது நெல்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தினார்.  இந்நிலையில், இப்படம் 2023-ம் ஆண்டு தமிழ் வருடப்பிறப்பு பண்டிகையின்போது வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.






மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திரைத்துறையில் எந்த படம் வெற்றி பெறும், தோல்வியடையும் என்பதை ரசிகர்கள் தீர்மானிப்பார்கள் என்பதால் ரஜினிகாந்த் நெல்சன் மீது முழு நம்பிக்கையுடன் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு அளித்துள்ளதற்கு ரஜினிகாந்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண