தல என கொண்டாடப்படும் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு இருக்கும் ஹைப்பையும் எதிர்பார்ப்பையும் சொல்லவே தேவையில்லை . படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது.வலிமை படத்தை ஹச்.வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளர். அஜித்தின் 60 வது படமாக உருவாகி வரும் வலிமை படத்தை தொடர்ந்து , தல 61 வது படத்திற்காக மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளது. அதாவது மூன்றாவது முறையாக அஜித்தின் படத்தை இயக்கவுள்ளார் ஹச்.வினோத். படத்தை வலிமை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இந்த செய்தியை தொடர்ந்து தற்போது சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் 61 வது படத்தில் அஜித் முழுக்க முழுக்க நெகட்டிவ் ஷேடில் நடிக்கவுள்ளாராம். ஹச்.வினோத் , அஜித்தின் 61 வது படத்திற்காக இரண்டு மூன்று கதைகளை அஜித்திடம் சொன்னாராம் அதில் அஜித் இந்த கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறியதால் அதையே படமாக்குவது என முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
முன்னதாக அஜித் நெகட்டிவ் ஷேடில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் மீம்ஸ்களை கலக்கிக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அஜித்தின் 61 வது திரைப்படத்தில் அப்படியான இரு கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்தால் , அது அவருக்கு மட்டுமல்ல , அவரது ரசிகர்களுக்கும் மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விரைவில் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க அஜித் தன்னிடம் கதை சொல்லிய தியாகராஜன் குமாரராஜாவிடம் மீண்டும் கதை விரிவாக்கத்தை மீண்டும் கேட்டிருக்கிறாராம்.அவரின் கதை அஜித்திற்கு பிடித்து போகவே பச்சை கொடி அசைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அஜித்தின் 62 வது படத்திற்கு தியாகராஜன் குமாரராஜாவோடு கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தியாகராஜன் குமாரராஜா முன்னதாக ஆரண்ய காண்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு சூப்பர் டியூலக்ஸ் திரைப்படத்தில் ஒரு பகுதியை இயக்கியிருந்தார்.தியாகராஜன் குமாரராஜாவுக்கு அஜித்துடன் இணைந்து வேலை செய்வது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் , திரைக்கதைக்கு உதவியாக இருந்துள்ளார் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்னும் சில வாரங்களில் அஜித்தின் 61 வது படம் குறித்த அறிவிப்பையும் நாம் எதிர்பார்க்கலாம்