துபாய் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் இருக்கும் அஜித் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும்  ‘வலிமை’ படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படம் குறித்து எந்தவொரு அப்டேட்களும் வெளியாகத இருந்த நிலையில், சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 


இந்த நிலையில், வலிமை படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புக்காக அஜித் ரஷ்யா செல்கிறார். இதற்காக துபாய் விமான நிலையத்திற்கு வந்த அவரை பார்த்த ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 



‘வலிமை’ அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என தயாரிப்பு வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக திரைப்படம் தீபாவளிக்குத் திரையரங்குகளைத் தெறிக்கவிடும் என அஜீத் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது முன்னதாகவே ரிலீஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே படத்தின் டீசர்  வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 






மற்றொருபக்கம் இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான RRR இந்தியா முழுவதும் தீபாவளி அன்று ரிலீஸாகும் நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகிதம் மக்கள் கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் தமிழ்நாட்டில் அதே தேதியில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படமும் திரையரங்குகளை எட்டவிருக்கிறது. இது இரண்டையும் கணித்தே போனி கபூர் அக்டோபர் 13 அன்று வலிமை திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.  அஜீத்துக்கான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மார்க்கெட்டை நோக்கமாகக் கொண்டே இதனை போனிகபூர் திட்டமிட்டுருப்பதாகக் கூறப்படுகிறது.


சிங்கிளா வெளியான இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்த  ‘நாங்க வேற மாறி’  பாடலை யுவன்ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் தத்துவப் பாடலாக இது இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் யூடியூப் டிரெண்டில் நம்பர் ஓன் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 1 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது.


வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.