Test Movie Twitter Review in Tamil: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன். முன்னணி கதாநாயகியாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா. மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சித்தார்த். இவர்கள் 3 பேரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டெஸ்ட்.
டெஸ்ட் கிரிக்கெட், சூதாட்டம், நடுத்தர வாழ்க்கை உள்ளிட்டவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் நேரடியாக பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள இந்த படம் குறித்து ட்விட்டர்வாசிகளின் விமர்சனத்தை கீழே விரிவாக காணலாம்.
இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ளது.
சினி முருகன் என்பவர் அவரது எக்ஸ் பக்கத்தில், குடும்ப பாசத்துடன் இணைந்த விளையாட்டுத் திரைப்படம் இது. முதல் பாதி தொய்வாக நகர்கிறது. திரைக்கதை மற்றும் பின்னணி இசை சுமார். மாதவனுக்காகவும், நயன்தாராவுக்காகவும் பார்க்கலாம். 5 புள்ளிக்கு 2.5 அவர் தந்துள்ளார்.
ஹேட் டெனா என்ற எக்ஸ்வாசி டெஸ்ட் படம் அவுட் ஆஃப் ஃபார்ம் என்று பதிவிட்டுள்ளார். மேலும், மாதவனை விரயம் செய்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
அதேசமயம், நீதிராய் என்ற பெண்மணி டெஸ்ட் படத்தை பாராட்டியுள்ளார். நயன்தாரா, சித்தார் நடிப்பு அபாரமாக உள்ளது. குறிப்பாக, மாதவன் அற்புதமாக நடித்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
சினி எக்ஸ்ப்ளோர் என்ற எக்ஸ்வாசி டெஸ்ட் படத்தின் திரைக்கதை சுமார் என்றும், படம் ஓரளவு நன்றாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், படத்தின் திரைக்கதையில் உயிரோட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இணையவாசிகள் தெரிவித்துள்ளனர்.