கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் மேத்யூ தாமஸ். இவர் தமிழிலில் லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திலும் ஹீரோவுக்கு நண்பனாக நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான லவ்லி திரைப்படம் காப்பிரைட் பிரச்னையில் சிக்கியுள்ளது. இயக்குநர் ராஜமெளி இயக்கத்தில் வெளியான ஈ படத்தை அப்படியே காப்பி அடித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஈ யுடன் பேசும் கதாநாயகன்
நடிகர் மேத்யூ தாமஸ் நடிப்பில் வெளியான லவ்லி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இதில், ஈ ஒரு பெண் கதாப்பாத்திரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதில், மேத்யூவுடன் அந்த ஈ படம் முழுக்க டிராவல் செய்வது போல் இடம்பிடித்திருந்தன. ஆனாலும் இப்படம் நான் ஈ அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை. சுமாரான வரவேற்பை பெற்றது. இந்நிலையில், லவ்லி படத்தில் இடம்பெறும் ஈ அனிமேஷன் அப்படியே நான் ஈ படத்தில் இடம்பெறும் ஈ போன்றே படக்குழுவினர் வடிவமைத்துள்ளதாக நான் ஈ படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருக்கிறது.
லவ்லி படக்குழுவிற்கு நோட்டீஸ்
நான் ஈ தயாரிப்பாளர் லல்லி படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதுகுறித்து பேசி லவ்லி படத்தின் இயக்குநர் திலீஷ் கருணாகரன் கூறியதாவது, நான் ஈ படத்தின் நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. லவ்லி படத்தில் இடம்பெறும் ஈ அப்படியே நடிகை உன்னி மாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கினோம். அது நான் ஈ படத்தில் இடம்பெறுவது போன்று இல்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.
லவ்லி படத்தின் கதை
லவ்லி படத்தில் ஈ பேசுவது கதாநாயகனாக மேத்யூவிற்கு மட்டுமே கேட்கும். சக்தி வாய்ந்த கதாநாயகனாக வரும் மேத்யூவிற்கு ஈ மட்டுமே பிடித்த உலகமாக மாறிவிடுகிறது. இதை, காமெடி கலந்த ரொமாண்டிக் படமாக திலீஸ் இயக்கியிருந்தார். இந்நிலையில், ஈ-யின் உருவ அமைப்பு நான் ஈ படத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது உறுதியாக தெரிகிறது. இதற்கு ஆதாரத்துடன் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும் என நான் ஈ பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக சினிமாக்களில் கதைத் திருட்டு என்பது தொடர் கதையாக நீடித்து வருகிறது. மலையாள சினிமா தனித்துவம் படைத்தது என்று எல்லோராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், அங்கும் இந்த பிரச்னையா என ரசிகர்கள் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர்.