தங்கள் நடித்தப் படங்கள் தோல்வியை சந்தித்ததால் தனது சம்பளத்தைத் திருப்பி கொடுத்துள்ளனர் ஏழு தெலுங்கு திரைப்பட நடிகர்கள்.


பெரும் பொருட்செலவில் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.ஒரு படம் வெற்றிபெற்றால் அந்த வெற்றி அனைவரையும் சேருவதுபோல் ஒரு படத்தின் தோல்வி அனைவரையும் ஒரே மாதிரி பாதிப்பதில்லை. ஒரு படத்தின் தோல்வியால் முதலில் பாதிக்கப் படுபவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்தான்.ஆனால் இன்று திரைப்பட நடிகர்கள் ஒரு படத்தின் தோல்விகளுக்கான பொறுப்பை எடுத்துக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள்.தங்களை நம்பி பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளர்களுடன் நிற்பது தங்களது கடமை என இவர்கள் கருதுகிறார்கள்.தெலுங்கு திரைப்படத் துறையின் 7 நடிகர்கள் தங்கள் நடித்தத் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தபோது தங்களது சம்பளத்தை திருப்பி கொடுத்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார்கள். யாரு இந்த ஏழு பேர்….?


சமந்தா


தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் சமந்தா. அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்தப் படம் சாகுந்தலம், இந்தப் படத்தில் நடிப்பதற்காக சமந்தா ஏழு கோடி சம்பளமாக பெற்றார். இந்த செய்தி இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவியது. ஆனால் சாகுந்தலம் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை இன்னும் சொல்லப்போனால் பெரும் நஷ்டத்தையே அந்த படம் சந்தித்தது. இந்த மாதிரியான சூழ்நிலையில் தான் சம்பளமாக பெற்ற ஏழு கோடியில் 3 கோடி ரூபாயை தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுத்துள்ளார் சமந்தா.. சமந்தாவின் இந்த செயல் அனைவராலும் வரவேற்கப் பட்டது.


ராம்சரண்


2010 ஆம் ஆண்டு ராம்சரன் நடிப்பில் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்தப் படம் ஆரஞ்சு.இந்த இழப்பை சரிசெய்ய 3.5 கோடி ரூபாயை தயாரிப்பாளர் நாகபாபுவிற்கு திருப்பிக் கொடுத்தார் ராம்சரண்


மகேஷ் பாபு


2010-ஆம் வெளியாகி தோல்வியை சந்தித்தது கலேஜா திரைப்படம். தனது சம்பளம் மொத்தத்தையும் திருப்பி ஏற்பட்ட தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்ட ஈடாக கொடுத்தார் இதில் நடித்த மகேஷ் பாபு


பவன் கல்யான்


தான் நடித்த லொமரன் புலி படம் தான் எதிர்பார்க்காத வெற்றி அடையாததால் தனது தயாரிப்பாளர்களுக்கு மொத்த சம்பளத்தையும் திருப்பி கொடுத்தார் நடிகர் பவன் கல்யான்


விஜய் தேவரகொண்டா


லைகர் திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் படத்தின் விநியோகஸ்தர்களுக்கு 6 கோடி ரூபாய் விஜய் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.


சாய் பல்லவி


சாய் பல்லவி நடித்த படி படி லேச்சே மனசு என்கிறப் படம் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றாலும் வசூலில் தோல்வியை சந்தித்தது.இதன் காரணத்தால் தனது மொத்த சம்பளத்தையும் திருப்பி கொடுத்தார் சாய் பல்லவி.


ரவி தேஜா


ராமா ரவ் ஆன் டியூட்டி படம் பெரும் தோல்வியை சந்தித்த காரணத்தினால் தனது சம்பளத்தை தயாரிப்பாளர்களுக்கு திருப்பிக் கொடுத்தார் ரவி தேஜா.