தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த தொடருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
வீரா மீதான மாறனின் காதல் கைகூடுமா? மாறன் தனது காதலியை திருமணம் செய்வாரா? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் நகரும் இந்த கதைக்களம் இன்னும் சூடுபிடித்துள்ளது. நாளை சண்டே ஸ்பெஷாக நாளை மதியம் 1.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. நாளைய தொடரில் என்னென்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.
மாறனுக்கு வீரா விடும் சவால்?
நாயகி வீரா மற்றும் அரவிந்த்தனுக்கு மெஹந்தி பங்ஷன் தொடங்குகிறது. அப்போது மாறன் மாப்பிள்ளை கொடுத்ததாக சொல்லி வீராவுக்கு ஒரு டிரஸ் கொடுக்க அவளும் அதை அணிந்து கொள்கிறாள். கடைசியில் அது பொய் சொல்லி மாறனே கொடுத்தது என்று தெரிகிறது.
மாறன் நாயகி வீராவிடம் இன்று முழுக்க மாப்பிள்ளை செய்ய வேண்டிய சடங்கை நான் தான் செய்வேன் என்று சொல்ல, வீரா உன்னால் அப்படி முடியாது, ஒன்னு செய்ய முடியலைனாலும் நீ என்னை விட்டு போய்டணும் என்று சொல்லி சவால் விடுகிறாள். மாறனும் சவாலை ஏற்று கொள்கிறான்.
வீராவுக்கு ஐ லவ் யூ:
இந்த பரபரப்புக்கு மத்தியில் யாரோ ஒருவர் ஒரு மஞ்சள் பையில் வெடிகுண்டை கொண்டு வந்து வீராவுக்கு கொடுக்கும் பரிசுளில் கலந்து வைத்து விடுகிறார். இந்த பாம் எப்போது வெடிக்கும்? என்று பரபரப்புக்கு மத்தியில் மாறன் தான் விட்ட சவால்படி மாப்பிள்ளை செய்ய வேண்டிய சடங்குகள் ஒவ்வொன்றையும் அவனே செய்கிறான். இதனால் வீரா கடுப்பாகிறாள்.
அப்போதுதான், எந்த பழக்கமும் இல்லை என்று கூறி வந்த அரவிந்தனுக்கு எல்லா வித கெட்ட பழக்கமும் இருக்கிறது என்பது தெரிய மாறனுக்கு தெரிய வருகிறது. அதை வீராவிடம் மாறன் சொல்ல அவள் நம்ப மறுக்கிறாள். பிறகு கூட்டத்தில் வைத்து வீராவுக்கு ஐ லவ் யூ சொல்ல அனைவரும் அதிர்ச்சியாக அதை சாதுர்யமாக சமாளிக்கிறான்.
ஆபத்தில் சிக்கிய நாயகி:
இந்த பங்ஷனுக்கு சிறப்பு விருந்தினராக வரும் ப்ரஜன், மாறன் நடந்து கொள்வதையும் வீராவையும் தொடர்ந்து கவனித்து வருகிறான், இறுதியாக மண்டபத்திற்குள் கேஸ் லீக்காவதாக எல்லாரையும் வெளியேற சொல்ல வீரா தெரியாமல் பாம் மீது கை வைத்து உள்ளவே மாட்டி கொள்கிறாள்.
மாறன் வீராவை காப்பாற்ற உள்ளே செல்ல ப்ரஜனும் பாமை செயலிழக்க செய்ய உள்ளே வருகிறான். வீரா மாறனை வெளியே போக சொல்ல, மாறன் நீ இல்லாமல் நான் எப்படி போவேன் என்று அவனும் பாம் மீது கை வைக்க ப்ரஜன் சாதுர்யமாக செயல்பட்டு இருவரையும் காப்பாற்றுகிறான்.
வீராவுக்கு அட்வைஸ்:
இறுதியாக நீங்க ரெண்டு பேர் தான் சரியான ஜோடி.. இன்னொரு முறை யோசித்து முடிவு எடு என்று வீராவுக்கு அட்வைஸ் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சண்டே ஸ்பெஷல் எபிசோடை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை மதியம் 1:30 மணிக்கு காண தவறாதீர்கள்.