ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.


ராம் சத்தியனை ரெஜிஸ்டர் ஆபீஸ் அழைத்துச் செல்வதற்காக சத்யன் வீட்டுக்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சீதாவுக்கு மீராவை கடத்தியது மகா தான் என்பது தெரிய வருகிறது. ராம் சத்தியன் வீட்டுக்கு வந்து விஷயத்தை சொல்ல உடனடியாக சென்று மீராவை கண்டுபிடிக்கலாம் என்று சொல்ல ராம் சீதா அது எல்லாத்தையும் பாத்துக்குவா காப்பாத்திட்டு போன் பண்ணதும் நாம ரெஜிஸ்டர் ஆபீஸ் போனா போதும் என சொல்கிறான். ஆனாலும் சத்தியன் கேட்க மறுக்க பிறகு ராம் ஒரு வழியாக சத்தியனை அமைதியாக்குகிறார்.


அடுத்து விஷால் மகாவுக்கு போன் செய்து ராம் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல எக்காரணம் கொண்டும் என் பையன் ராமுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று சொல்லி போனை வைக்க விஷால் எனக்கு ராமும் எதிரி தான், அவனையும் விடக்கூடாது என இருவரையும் அடித்து தூக்க காத்திருக்கிறான்.


மறுபக்கம் சீதா மகாவிடம் வந்து மீரா எங்கே எனக் கேட்க மகா நக்கலாக பேச இருவருக்கும் இடையே வாக்குவாதமும் சண்டையும் ஏற்படுகிறது. இந்த சண்டையில் சேது சீதாவை அடிக்க போக முதல்ல கஞ்சா கடத்தினாரு, இப்போ பொம்பளை மேல கைவைக்க வராரு என்று சேதுபதியை அவமானப்படுத்த மகா சீதாவை அறைய இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என தொடையில் அடித்து சவால் விடுகிறாள் சீதா.


அதைத் தொடர்ந்து மகா தன்னுடைய மூன்று பெண்களையும் அழைத்து நீங்க இங்க இருக்க வேண்டாம் உடனடியாக காலேஜ் கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறாள். ரூமுக்குள் இருக்கும் சீதா அடுத்து என்ன செய்வது என யோசிக்க துரை இப்படியே விட்டால் நாம கொஞ்சம் கொஞ்சமா தோத்துக்கிட்டே போயிடுவோம் என்று சொல்ல அதுக்கு வாய்ப்பே கிடையாது என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு என்று சீதா மகாவின் ‌மூன்று பெண்களையும் கடத்த திட்டம் போடுகிறாள்.


துரை எனக்குத் தெரிந்த ஆட்கள் இருக்காங்க அவங்க வச்சு தூக்கிடலாம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறான். பிறகு சீதா ஹாயாக உக்கார்ந்து கொண்டிருக்க இதை மகாவும் அர்ச்சனாவும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இவ ஏதோ பிளான் பண்ணிட்டா என்று மகாலட்சுமி சொல்ல அர்ச்சனா நான்தான் ஏற்கனவே சொன்னேன்ல அவ நம்மகிட்ட மாட்டல, நாம தான் அவகிட்ட மாட்டி இருக்கோம் என்று சொல்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.




மேலும் படிக்க: Vidamuyarchi Update: அஜித்தின் ‘விடாமுயற்சி’ அப்டேட் எப்போது?.. வீடியோ மூலம் பதில் சொன்ன மகிழ் திருமேனி..!