தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடி வீட்டிற்கு வந்து மகாவுக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, ராம் ரவுடியை பார்த்து இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்க மகா அவனை சமாளித்து ரவுடியை அர்ச்சனா ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறாள். ரூமுக்குள் வந்த ரௌடி கால் மேல் கால் போட்டு ஹாயாக உட்கார்ந்து கொண்டு எனக்கு டீ வேண்டும் என்று கேட்க மகா வேறு வழியில்லாமல் வேலைக்காரிக்கு போன் போட்டு டி போட சொல்கிறாள்.


ஆனால் அவ மேல வர கூடாது என முடிவெடுத்து மகாவும் அர்ச்சனாவும் கீழே வந்து அவர்களே டி போட்டு எடுத்து வர சீதா இவங்க டி போட்ட நல்ல இருக்காது என்று அவளே போட்டு எடுத்து கொண்டு பின்னாடி வர உள்ளே வந்த இவர்கள் சீதா வருவதை பார்த்து ரவுடியை மறைந்து கொள்ள சொல்கின்றனர்.






பிறகு சுபாஷ்க்கு போன் போட்டு 40 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு வர சொல்ல அவனும் வீட்டிற்கு வர சீதா உங்களை மாதிரியே அர்ச்சனா ஒருத்தரோட பழக்கம் வச்சிருந்தா என்ன பண்ணுவீங்க என்று கலாய்க்கிறாள். சுபாஷ் ரூமுக்கு வர அங்கு இருக்கும் ரவுடியை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவனிடம் சண்டை போட அர்ச்சனா நான் தான் வர சொன்னேன் என்று சொல்ல சுபாஷ்க்கு பிபி ஏறுகிறது.


மகாவுக்கு தெரிந்தவர் தான் என்று சொல்ல பிறகு சுபாஷ்க்கு முழு உண்மை தெரிய வருகிறது, பணத்தை கொடுத்து ரவுடிக்கு சிங் கெட்டப் போட்டு வெளியே அனுப்ப அந்த நேரம் பார்த்து அங்கு வரும் சீதா ரவுடியை தடுத்து நிறுத்தி ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.