தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.


இந்த சீரியலின் கடந்த சனிக்கிழமை எபிசோடில் சீதாவுக்கு நன்றி மீது சந்தேகம் வர நான்சி மகா போட்டோ முன்பு நின்று இன்னொரு முறை அந்த சீதாவை ஜெயிக்க விடமாட்டேன் என்று சொன்ன நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது சேதுவின் கவர்மெண்ட் கம்பெனியில் ஆர்டர் கொடுத்திருந்தவர்கள் சிலர் வீட்டிற்கு வந்து மகா இருக்கும்போது ஆர்டர் கொடுத்திருந்தோம். அவங்க இருந்திருந்தால முடிச்சு கொடுத்திருப்பாங்க உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரும் அதுக்குள்ள நீங்க ஆர்டர் முடிச்சு கொடுக்கணும் இல்லனா உங்க கம்பெனி மேல கேஸ் போடுவோம் என்று வார்னிங் கொடுத்து விட்டு செல்கின்றனர்.


இதனால் செய்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க சீதா என்னாச்சு என்று கேட்டு டைலர்களிடம் நீங்க பேசுங்க நீங்க கூப்பிட்டா கண்டிப்பா வந்து வேலை பண்ணுவாங்க என்று கூறுகிறார். சேதுவும் எல்லோரிடமும் பேச அவர்கள் வருவதாக சொல்லி கடைசி நேரத்தில் கை விரித்து விடுகின்றனர்.


இந்த விஷயம் அறிந்த சீதா இதெல்லாம் நான்சி வேலையா இருக்கும் என சந்தேகப்பட்டு இதற்கு தீர்வு காண முடிவெடுக்கிறாள். அதைத்தொடர்ந்து நான்ஸி விஷாலை சந்தித்து பேச அவன் நீங்க எதுக்கு மகாவை கொன்னுட்டு நான்ஸியா வந்திருக்கீங்க என்று கேள்வி கேட்க அதற்கு நான்ஸி பதில் சொல்ல மறுக்கிறாள்.


பிறகு இந்த சீதாவை தோற்கடிக்கணும் இன்னொரு முறை அவள ஜெயிக்க விடக்கூடாது அதுக்கு உன்னுடைய உதவி தேவை என்று கேட்க நான் ஜெயிலுக்கு போக காரணமும் அந்த சீதா தான் அவளை பழிவாங்க நான் ரெடி என நான்ஸியோடு கூட்டு சேர்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.