தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திகழ் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் எல்லோரும் மண்டபத்திற்கு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
உண்மையை அறிந்த இசை:
அதாவது, ஸ்ரீஜா எப்படியாவது இசையை மண்டபத்தில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என திட்டம் போடுகிறாள். மறுபக்கம் ஸ்ரீஜாவின் அத்தை மாமாவாக நடிக்க வந்தவர்கள் இதை கொண்டு வா அதை கொண்டு வா என அதிகாரம் செய்கின்றனர். இதைப் பார்த்த ஒருவர் இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று சந்தேகம் கொண்டு அவனிடம் சத்தம் போடுகிறார்.
பிறகு இசை அவர்கிட்ட எதுக்கு சத்தம் போட்டீங்க என்று விசாரிக்க அவன் நடிக்க வந்தவன் என்ற உண்மையை உடைக்கிறார். என் பொண்டாட்டி பேர் பரமேஸ்வரி என்று சொல்ல ஸ்ரீஜாவின் திட்டத்தை அறிகிறாள் இசை.
அடுத்து நடப்பது என்ன?
அதன் பிறகு இசை பரமேஸ்வரி சந்தித்து அவளை மண்டபத்திற்கு அழைத்து வருகிறாள். பரமேஸ்வரி வருகையால் அடுத்து நடக்கப் போவது என்ன? இசை ஸ்ரீஜாவின் முகத்திரையை கிழிப்பாளா? என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.