தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமியார் விஷாலுக்கு முதலில் திருமணம் செய்ய சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

இசையை ஆசிர்வதித்த சாமியார்:

அதாவது, சாமியார் இசையை கூப்பிட்டு ஆசிர்வாதம் செய்ய சுபத்ரா சந்தோஷமடைகிறாள். அடுத்து இசை வர்ஷினியை கூப்பிட்டு இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும், நீ தான் கல்யாண பொண்ணு என்று சொல்ல வர்ஷினியும் உனக்கும் கல்யாணம் நடக்கும் என்று சொல்கிறாள். 

அடுத்து மீண்டும் ரம்யாவை பயமுறுத்தி உண்மையை சொல்ல வைத்து விடலாம் என்று முயற்சி செய்கின்றனர். மறுபக்கம் விஷால் ஸ்ரீஜாவை பார்க்க அவளது ரூம்க்கு செல்ல கோவிலுக்கு சென்றிருப்பதாக சொல்கின்றனர். ஆனால் ஸ்ரீஜா தனது அப்பாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். 

Continues below advertisement

பழி தீர்க்கச் சொல்லும் ஸ்ரீஜா அப்பா:

அவரது அப்பா நீ அந்த குடும்பத்துக்கு மருமகளா போனால் தான் உன் அம்மாவை கொன்னவங்கள பழி தீர்க்க முடியும் என்று சொல்கிறார். அடுத்து விஷால் இசையை பார்க்க இசை பீல் ஆக, விஷால் அவளிடம் பேச வருகிறான். அப்போது அங்கு வரும் ஸ்ரீஜா பேச விடாமல் தடுத்து விடுகிறாள். 

அடுத்து எல்லாரும் வீட்டில் இருந்து மண்டபத்திற்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.