தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராகவிற்கும் தீப்திக்கும் திருமணம் செய்து வைக்க பானுமதி ஜாதகத்தை மாற்றி எழுதிய விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நாடகமாடிய பானுமதி:
அதாவது, இசை இந்த விஷயத்தை எப்படியாவது சுப்ரதாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்ய, பானுமதி நாடகம் போட்டு ஆட்டத்தை கலைத்து விடுகிறாள்.
லெட்டர் எழுதி வைத்துச் சென்ற விஷால்:
விஷால் இசையை பார்க்க அவளது வீட்டிற்கு வர, அவள் இல்லாததால் எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லி லெட்டர் எழுதி வைத்து விட்டு அங்கிருந்து கிளம்ப ருக்குமணி இதை கவனிக்கிறாள். விஷால் சென்றதும் லெட்டரை எடுத்து படிக்க அதில் அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எழுதி இருக்க அதிர்ச்சி அடைகிறாள்.
மங்காவிடம் விஷயத்தை சொல்ல இசைக்கு தெரியாமல் மறைக்க சொல்கிறாள். அடுத்து இசை கோவிலுக்கு வர ப்ரியாவும் அங்கு அப்பாவுடன் வருகிறாள். அப்பா போதையில் இருப்பதால் கோயிலுக்குள் வராமல் ஆட்டோவில் இருக்க ப்ரியா கோவிலுக்கு வருகிறாள்.
ஆறுதல் சொல்லும் ப்ரியா:
ஏன் டல்லாக இருக்க என்று கேட்க இசை நடந்த விஷயத்தை சொல்கிறாள். ப்ரியா கண்டிப்பா பானுமதி ஜாதகத்தை மாற்றி எழுதி இருக்காங்க என்று ஆதாரம் கிடைக்கும் என ஆறுதல் சொல்கிறாள். பிறகு விஷால் காதலியை சந்திக்க வெளிநாடு கிளம்பும் அவள் விஷாலை பிரிய மனமில்லாமல் அவன் கையால் குங்குமம் வைத்து கொண்டு கிளம்பி செல்கிறாள்.
தொடர்ந்து வீட்டிற்கு வந்த இசை வர்ஷினி திருமணம் குறித்து கவலையில் இருக்க ராகவ்வுக்கும் உனக்கும் கல்யாணம் நடக்கும், அதே மாதிரி எனக்கும் விஷாலுக்கும் கல்யாணம் நடக்கும், கவலைப்படாதே என்று வாக்கு கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.