தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் நளினி இசைக்கு கிப்ட் கொடுத்து பாராட்டிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பேதி மாத்திரை கலந்த ஸ்ரீஜா:
அதாவது, ஸ்ரீஜா நளினியை எப்படியாவது இங்கிருந்து விரட்ட வேண்டும் என முடிவெடுத்து ஜூஸில் பேதி மாத்திரையை கலந்து அதை சிந்தாமணியிடம் கொடுத்து கொடுக்க சொல்கிறாள்.
ஆனால் கடைசியில் அந்த ஜூஸ் சிந்தாமணி இடமே வந்து சேர அதை குடித்து விடுகிறாள். பிறகு நளினி மேடை ஏறி குத்து பாட்டு பாடி கல்யாண மண்டபத்தை கலகலப்பாக்க சிந்தாமணி வயிற்றை கலக்கி பாத்ரூமுக்கு ஓடுகிறாள்.
விஷாலிடம் சமாளித்த ஸ்ரீஜா:
அடுத்ததாக ஸ்ரீஜா நடிப்பதற்காக வேறு ஒருவரை அப்பா என அழைத்து வர அவர் சுபத்ராவை நம்ப வைக்கிறார். மேலும் சுபத்திராவிடம் மன்னிப்பு கேட்க சரி பரவால்ல விடுங்க அதான் கல்யாணத்துக்கு வந்துட்டீங்களே என்று மன்னிக்கிறாள்.
ஆனால் விஷாலுக்கு அது ஸ்ரீஜாவின் அப்பா இல்லை என்ற விஷயம் தெரியும் என்பதால் ஸ்ரீஜாவிடம் சத்தம் போட அவள் அப்பா வெளிநாட்டில் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் விஷால் இதெல்லாம் ரொம்ப தப்பா இருக்கு என்று எச்சரிக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.