தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் காளியம்மாவை மீண்டும் ஜெயிலுக்கு அனுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
காளியம்மாள் சதியை முறியடித்த கார்த்திக்:
அதாவது, ஆபிஸ்க்கு சாமுண்டீஸ்வரி சந்திரகலாவுடன் வர சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறையினர் அங்கு வந்து சோதனையிடுகின்றனர். காளியம்மா ஏற்பாடு செய்த இவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் எதுவும் கிடைக்காமல் வெளியே செல்கின்றனர்.
பிறகு கார்த்திக் காளியம்மாவுக்கு போன் செய்து நான் தான் எல்லாத்தையும் மாற்றி வச்சேன்.. என்று சதியை முறியடித்த கதையை சொல்லி ஷாக் கொடுக்கிறான்.
கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி:
தொடர்ந்து அடுத்ததாக சாமுண்டீஸ்வரி செங்கல் சூளைக்கு வருகிறாள், அங்கு வேலை செய்பவர்கள் எல்லாரும் கார்த்திக் இருக்கும் வரை எல்லாம் சரியாக நடந்தாக சொல்லி முறையிடுகின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி கடுப்பும் கோபமும் அடைகிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.