தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் விஷால் இசை கழுத்தில் தாலி கட்டிய விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

தற்கொலை டிராமா ஆடிய ஸ்ரீஜா:

அதாவது ஸ்ரீஜா இசையின் தாலியை கழட்ட போக இசை தாலி மேலே கைய வச்ச அவ்வளவுதான் என எச்சரிக்கிறாள். பிறகு ஸ்ரீஜாவின் அப்பா என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதில் என சுபத்ராவை பார்த்து கேள்வி கேட்கிறார். 

மேலும் இனிமேல் யார் கல்யாணம் பண்ணிப்பா? உங்க பெரிய பையனுக்கு கட்டி வையுங்க என்று சொல்ல சுபத்திரா யோசிக்க பாருங்க நீங்களே யோசிக்கிறீங்க அப்போ என் பொண்ணோட வாழ்க்கை அவ்வளவுதான் என்று டிராமா போட ஸ்ரீஜாவும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக ரூமுக்குள் ஓடுகிறாள். 

Continues below advertisement

அதிர்ச்சியில் ராகவ்:

இதனால் சுபத்ரா ஸ்ரீஜாவை சந்தித்து உன்னை என் வீட்டு மருமகளாக என சத்தியம் செய்து வாக்கு கொடுக்கிறாள். இந்த விஷயத்தை அறிந்த ராகவ் அதிர்ச்சி அடைகிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.