தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் ரேவதி கார்த்தியை சந்திக்க சென்றிருந்த நிலையில் இன்று  நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கடுப்பாகிய சாமுண்டீஸ்வரி:

அதாவது ரேவதி வீட்டில் இல்லாததால் சாமுண்டீஸ்வரி கடுப்பாகி சத்தம் போடுகிறாள். சந்திரகலா ரேவதி கார்த்தியை தான் சந்திக்க சென்றிருப்பாள் என்று சொல்லி ஏற்றி விடுகிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி ஒரு கட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ரேவதி காணவில்லை என புகார் கொடுக்க வெளியே கிளம்ப ரேவதி எதிரில் வருகிறாள். 

என் புருஷன்தான்:

எங்கடி போயிட்டு வந்த என்று சாமுண்டீஸ்வரி கேட்க, என் புருஷனை பார்க்க போய்ட்டு வந்தேன் என்று பதிலடி கொடுக்கிறாள். காசு வெட்டி போட்ட பிறகு என்னடி புருஷன்? என்று கேட்க அது நீங்க சொன்னீங்கன்றதுக்காக பண்ணது. ஆனா சட்டப்படி கார்த்திக் இன்னமும் என்னுடைய புருஷன் தான் என்று பதிலடி கொடுக்கிறாள். 

Continues below advertisement

இதுகுறித்து சந்திரகலா பேச ரேவதி நீங்க உங்க புருஷனோட வாழ்ந்திருந்தால், இதெல்லாம் தெரியும் என பதிலடி கொடுக்கிறாள். இதைத்தொடர்ந்து சந்திரகலா காளியம்மாவிற்கு ஃபோன் போட்டு நடந்ததை சொல்கிறாள்.

விவாகரத்து?

காளியம்மா சாமுண்டீஸ்வரிக்கு கார்த்திக் மேல இருக்கிற கோபம் மட்டும் குறைஞ்சிடுவே கூடாது. அதுதான் நமக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறாள். பிறகு சந்திரகலா கார்த்திக் ரேவதியை நிரந்தரமாக பிரிக்க விவாகரத்து வாங்கிவிடலாம் என்று ஐடியா கொடுக்க சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்லி வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ,