தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் விஷாலை அடைய ஸ்ரீஜா புது திட்டம் தீட்டிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

ஸ்ரீஜா வீட்டிற்குச் சென்ற இசை:

அதாவது இசை பூஜையை நல்லபடியாக செய்து முடிக்க ஸ்ரீஜா விஷாலை அடைவதற்காக திட்டமொன்றை தீட்டுகிறாள். தனது தோழி வீட்டிற்கு சென்று ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து விஷாலை அங்கு வர சொல்கிறாள். 

விஷாலின் ஸ்ரீஜாவை பார்க்க செல்ல ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுக்க விஷால் அதைக் குடித்து மயங்குகிறான். விஷால் வீட்டுக்கு வராததால் இசை அவனைத் தேடி ஸ்ரீஜா இருக்கும் இடத்திற்கு செல்கிறாள். 

Continues below advertisement

போதையில் அத்துமீறினானா விஷால்?

ஆனால் அங்கு யாரும் இல்லை எல்லோரும் கிளம்பி விட்டதாக சொல்லி இசையை திருப்பி அனுப்புகின்றனர். இங்கே மயக்கத்தில் இருக்கும் விஷாலுடன் ஸ்ரீஜா ஒன்றாக இருப்பது போல போட்டோ எடுத்துக் கொள்கிறாள். 

மறுநாள் காலையில் விஷால் கண் விழிக்க ஸ்ரீஜா தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி போட்டோவை காட்ட விஷாலும் அதை நம்பி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.