தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் முக்கியமான தாெலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகிறது.

Continues below advertisement

ஜீ தமிழில் திருமாங்கல்யம்: 

அந்த வரிசையில் தற்போது புதியதாக ஒரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளது. அந்த புதிய சீரியலின் பெயர் “திருமங்கல்யம்”. இந்த புதிய சீரியல் வரும் நவம்பர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.  

இந்த புதிய சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. உணர்வுகள், திருப்பங்கள், விறுவிறுப்பான கதை என அனைத்தும் நிரம்பியுள்ள இந்த தொடர், ஒளிபரப்பாகும் முதல் நாளிலேயே பார்வையாளர்களின் இதயத்தை கொள்ளை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

கதை என்ன?

ஒரு கிராமத்தை அழகிய சேர்ந்த லட்சுமி என்ற பெண் அந்த கிராமத்திற்கே அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் அவளது சித்தி லட்சுமியை ராசி கெட்டவள் என அவமானப்படுத்தி குடும்பத்தை விட்டு தள்ளி வைக்கிறாள்.

ஆனால் ஒரு கட்டத்தில் அவளால் தான் தனது குடும்பத்திற்கே அதிர்ஷ்டம் என அறிந்து, அந்த அதிர்ஷ்டம் தனது குடும்பத்தை விட்டு சென்று விட கூடாது என்பதற்காக ஒரு திருமணத்தை ஏற்பாடு செய்து கடைசி நொடியில் வயதான தனது தம்பிக்கு லட்சுமியை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறாள். கடைசி நொடியில் நாயகன் திருவுக்கும் லட்சுமிக்கும் எப்படி திருமணம் நடக்கிறது? அடுத்து அவர்களின் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களம்.

நடிகர்கள் யார்? யார்?

கதையின் நாயகியாக லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் மேக்ஹா என்பவர் நடிக்க நாயகனாக திரு என்ற கதாபாத்திரத்தில் பிரிதிவிராஜ் நடிக்கிறார். மேலும் திருவின் காதலியாக திவ்யா என்ற கதாபாத்திரத்தில் காயத்ரி ஸ்ரீ நடிக்கிறார். இந்த தொடர் ரசிகர்களை கவரும் என்று சீரியல் குழு நம்பிக்கையுடன் உள்ளனர்.