Meenakshi Ponnunga: மீனாட்சி வீட்டுக்கு வந்த சக்தி.. திட்டி தீர்த்த ரங்கநாயகி - இன்றைய எபிசோட் அப்டேட் இதோ...!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க

Continues below advertisement

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்  ரங்கநாயகி சக்தியை திட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும்.

நேற்றைய எபிசோடில் சக்தி வெற்றி இருவரும் வீட்டுக்குள் வந்தவுடன் ரங்கநாயகி கோபமாக முகத்தை திருப்பி கொள்கிறார். அப்போது சரண்யா சக்தியை விளக்கேற்ற வருமாறு அழைக்க ரங்கநாயகி மேலும் கோபப்படுகிறாள். இதனிடையே பஞ்சாயத்தில் நடந்த சம்பவங்களை யமுனா மீனாட்சியிடம் சொல்ல மீனாட்சி சக்தி மேல் வருத்தத்துடன் செல்கிறாள். அடுத்து முதல் இரவு அறைக்கு வந்த வெற்றியிடம் தனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என  சக்தி திட்டுகிறாள். யமுனாவின் கல்யாணம் நடைபெற வேண்டும் என்பதற்காகவே பஞ்சாயத்தில் நான் புகுந்த வீட்டிற்கு செல்கிறேன் என்று சொன்னதாக சொல்லும் காட்சிகள் இடம் பெற்றது.

இன்றைய எபிசோடில் வெற்றியின் வீட்டிலிருந்து சக்தி கோபமாக வெளியே செல்ல, திடியன் நானும் உடன் வருகிறேன் என்று சொல்கிறான்.  ஆனால் யாரும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு சக்தி வெளியே போய் விடுகிறாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ரங்கநாயகி நான் கோபப்பட வேண்டிய இடத்தில் இவள் கோபப்படுகிறாள் என்று கூறுகிறார். அடுத்து ஜீ தமிழ் சரிகமப பாடகர் மீனாட்சி மெஸுக்கு வருகிறார். அவர் கடவுள் அமைத்து வைத்த மேடை என்ற பாடலை பாட அந்த பாடல் எங்கள் வாழ்வில் நடப்பதை போல் இருக்கின்றது என்று யமுனா கூறி பாடகரை பாராட்டுகிறாள்.

அடுத்து யமுனா, துர்கா, மீனாட்சி பேசிக் கொண்டிருக்க சக்தி அங்கே வருகிறாள்‌. நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க மீனாட்சி சக்தியால், ஏற்பட்ட அவமானத்தை கூறுகிறாள். அடுத்த பெண்களுக்கு எப்படி திருமணம் செய்வது என்று கூறி வருத்தப்படுகிறாள்.சக்தியை அம்மா வீட்டுக்குள் அழைக்காததால், அவர் திரும்ப வெற்றி வீட்டுக்கு செல்லாமல் கோவிலுக்கு சென்று சாமியிடம் புலம்புகிறாள்‌. பிறகு சக்தி, மீனாட்சி மெஸ்சிற்கு சாதாரண வாடிக்கையாளர் போல் வருகிறாள். அவருக்கு மீனாட்சி பரிமாறாமல் கோபத்தில் இருக்க சகோதரிகள் பரிமாறுகின்றனர்.

இதற்கிடையில் வெற்றியின் வீட்டில் செல்வ முருகன் மருந்தை எடுக்கப் போகும்போது வீல்சேரில் இருந்து தவறி கீழே விழ, சக்தி அவருக்கு உதவி செய்கிறாள். இதை பார்த்து ரங்கநாயகி சக்தியை திட்டும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. 

Continues below advertisement