Meenakshi Ponnunga: சக்தியின் திருமணம் நடக்கும் கோவிலுக்கு வரும் வெற்றி... அடுத்து நடக்கப்போவது என்ன?

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தியின் திருமணம் நடக்கவிருந்த கோவிலுக்கு வெற்றி வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சக்தியின் திருமணம் நடக்கவிருந்த கோவிலுக்கு வெற்றி வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலில் மீனாட்சியாக அர்ச்சனா நடிக்கிறார். இவருக்கு யமுனா, சக்தி, துர்கா ஆகிய மூன்று மகள்கள். தங்களை விட்டுச் சென்ற கணவருக்கு, எதிராக மீனாட்சியும், தந்தைக்கு எதிராக அவரது மகள்களும் வாழ்ந்து காட்டுவதே இந்த சீரியலின் கதைச் சுருக்கமாகும். 

இதுவரை  நடந்தது என்ன? 

நேற்றைய எபிசோடில் மீனாட்சி எவ்வளவோ சொல்லியும், யமுனாவை காரணம் காட்டி சங்கிலியை திருமணம் செய்வதில் சக்தி உறுதியாக இருக்கிறாள். அனைவரும் திருமணம் நடக்கவிருக்கும் கோவிலுக்கு வருகின்றனர். அங்கு மீனாட்சி சக்தி சங்கிலி கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் கோவிலில் வெளியே சென்று அமர்ந்து கொள்கிறாள்.மறுபக்கம் வெற்றியும் பூஜாவும் மண்டபத்தில் கல்யாணத்துக்கு தயாராகும் நிலையில்  திடியன், கிரி இருவரும் பிளான் செய்து வெற்றியின் வஸ்திரத்தை ஹோமக் குண்டத்தில் நெருப்பில் எரித்து விடுகிறார்கள். இதனால் பூஜா டென்ஷனாகிறாள். 

இன்றைய எபிசோடில் சக்தி சங்கிலி கல்யாணம் ஒரு பக்கம், வெற்றி பூஜா கல்யாணம் ஒரு பக்கம் என பரபரப்பாக வேலைகள் நடந்து வரும் நிலையில் மீனாட்சி சாமியிடம் தன் நிலைமையை சொல்லி புலம்புகிறாள். வெற்றியின் அங்கவஸ்த்திரம் எரிக்கப்படுவதால் ஐயர் சொல்லி,  பரிகாரம் செய்ய வெற்றி கோவிலுக்கு செல்கிறான். 

அப்போது பூஜா ஒரு அடியாளை அனுப்பி, வெற்றியை பாலோ செய்து சொல்கிறாள். இதற்கிடையில் சக்தி இருக்கும் அதே கோவிலுக்கு வெற்றி வர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். அடுத்ததாக கோவிலில் ஒரு பாட்டி சங்கிலியை சந்தித்து  வெற்றி.சக்தி இருவரும் தன் வீட்டில் தங்கியிருந்த விஷயம் பற்றி சொல்கிறார். இதை கேட்ட சங்கிலி கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola