ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மாறுவேடத்தில் வந்திருப்பது யமுனாவுக்கு தெரியவந்து அவனை திட்டி அனுப்ப அந்த நேரம் பார்த்து கார்த்திக்கின் அப்பா அங்கு வந்து வீட்டுக்கு கூப்பிட நான் யமுனாவுடன் தான் வாழ்வேன், வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்ல அவர் அவனை அறைந்து விட்டு கிளம்பி செல்கிறார்.


பிறகு கார்த்திக் நாளைக்கு 6:00 மணிக்குள் நீ என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல பிறகு பெரியவர் ஒருவர் வந்து மெஸ்ஸில் வேலை செய்த பெரியவர் போல் ஒருவர் பஸ்ஸில் அடிபட்டு விழுந்நு விட்டார் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


அடுத்ததாக யமுனா பதட்டத்தோடு ஹாஸ்பிடலுக்கு வந்து விசாரிக்க அவர் ஸ்பாட் அவுட் என்று சொல்லி பாடியை அடையாளம் காட்ட சொல்லி அழைத்துச் செல்ல யமுனா கண்ணீரோடு சென்று பார்க்க அது கார்த்திக் இல்லை என தெரிய வருகிறது.யமுனா வெளியே வர எதிரே கார்த்திக் வந்து இப்போதாவது என்னை ஏற்றுக் கொள் என்று சொல்ல இனி முடிவு என்னிடம் இல்லை மீனாட்சியிடம் பேசிக் கொள்ளுங்கள் என சொல்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.