சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தியும் ஜனனியும் புதுசா தொழில் ஆரம்பிக்க போவதாக விசாலாட்சி அம்மாவிடம் சொல்லி நல்ல நாள் பார்த்து சொல்ல சொல்கிறார்கள். அதை கேட்டு கடுப்பான குணசேகரன் "எனக்கு எதிரா வீட்ல பிரச்சினை செய்றது பத்தாதுன்னு எனக்கு எதிரா தொழில் வேற தொடங்க போறாங்களா" என பிரச்சினை செய்கிறார்.


ஜனனியின் புது தொழில்:


ஞானமும் சக்தியை பார்த்து "உனக்கு என்ன தெரியும்னு தொழில் தொடங்க போற. உன்னால நிர்வாகம் பண்ண முடியுமா? யார் பெயரில் தொழில் தொடங்க போற?" என கேட்கிறான். "இன்னும் எதுக்கு சக்தி மறைச்சு மறச்சு செய்யணும் உண்மையை சொல்லீடு" என்கிறாள் ஜனனி. "ஜனனி பெயரில் தான் தொடங்க போறோம், இரெண்ட பேரும் சேர்ந்து தான் நிர்வாகம் செய்ய போகிறோம்" என்கிறான் சக்தி. 



"தொழில் தொடங்க அப்படியே பேங்க் மொத்த பணத்துக்கும் லோன் கொடுக்குதா? முதல் பணம் எங்கிருந்து வந்தது" என துருவி துருவி கேட்கிறார் குணசேகரன். சக்தி அமைதியாக நிற்க "அந்த கிழவி தான் நம்ம கிட்ட இருந்து பிடுங்கி இதுங்க கிட்ட குடுத்து இருப்பா" என்கிறான் கதிர். இதை கேட்டுக்கொண்டு இருந்த விசாலாட்சி மனசு கேட்காமல் "நான் தான் பா என்னோட நகையை கொடுத்து தொழில் தொடங்க சொன்னேன்" என விசாலாட்சி அம்மா சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 


விசாலாட்சி உறுதி:


"நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு உனக்கு நகை போட்டு அழகு பார்த்தால் நீ அதை தூக்கி யாருக்கோ கொடுப்பியா. இது வரைக்கும் நீ எனக்கு ஏதாவது செய்து இருப்பியா" என அடுத்தடுத்து வார்த்தைகளால் அம்மாவை காயப்படுத்துகிறார். "நான் உன்னை பத்து மாசம் சுமந்து பெத்துக்கலயா. நீ பொறக்கமலேவா இவ்வளவு சம்பாதிச்ச. நீ கஷ்டப்படும் போது நானும் உனக்கு உறுதுணையா தானே இருந்தேன். அதை எல்லாம் நான் சொல்லி காட்டினேனா" என விசாலாட்சி அம்மா சொல்ல "அப்போ என்னை உன்னோட கையாள கொன்னுடு" என ட்ராமா போடுகிறார். 


ஜனனி சக்தியிடம் சொல்லி அம்மாவின் நகைகளை திருப்பி கொடுக்க சொல்கிறார். விசாலாட்சி அம்மா அதை வாங்க மறுக்கிறார். "யாரு என்ன சொன்னாலும் இந்த நகை உனக்கு தான்" என உறுதியாக சக்தியிடம் சொல்கிறார். "நீ சம்பாதிச்ச சொத்தை கொடுத்தா தான் தப்பு. ஆனா இது என்னுடைய அம்மா எனக்கு போட்ட நகை. இதை நான் விருப்பட்டவர்களுக்கு கொடுக்க எனக்கு உரிமை உள்ளது. ஏன் என்னை யாருமே இந்த வீட்டில் மதிக்கவே மாட்டேன் என்கிறீர்கள். என்னை இப்படி கொடுமை படுத்துவதற்கு பதில் என்னை உன் கையாலேயே கொன்னுடு" என்கிறார் விசாலாட்சி அம்மா. 


 



ஞானம் சக்தியின் சட்டையை பிடித்து சண்டைக்கு வருகிறான். "இவ உன்ன நடு தெருவுல விட்டுட்டு போவா அப்போதான் அண்ணன்களோட அருமை உனக்கு தெரியும்" என்கிறான். "அப்போ கூட நான் என்னோட சொந்த காலில் தான் நிப்பேன். வசதியா வாழனும்னு இவங்களோட ஒட்டிக்கிட்டு இருக்க மாட்டேன். இவங்க காட்றது உண்மையான பாசம் இல்ல அவங்களோட சுயரூபம் தெரிந்தா தான் நீ திருந்துவ" என்கிறான் சக்தி. 


கதிர் மறுபக்கம் எகிறிக்கொண்டு வர "ச்சீ வாயை மூட நீ செஞ்ச கிரிமினல் வேலையை எல்லாம் சொன்னா நீ நாண்டுக்கிட்டு தான் சாவ"என்கிறான். அப்படி கதிர் என்ன செஞ்சுட்டான் என குணசேகரன் கேட்க "அது அவங்க அவங்க மனசாட்சிக்கு தெரியும்" என்கிறாள் ஜனனி. "இது போல பிரச்சினை வர கூடாதுன்னு தான் சொல்ல வேண்டாம் என நினைச்சோம்" என்கிறாள். 


விடாபிடியாக "இந்த வீட்ல ஆதி குரூப் ஆஃப் கம்பெனி மட்டும் தான் இருக்கனும்" என சொல்லிவிடுகிறார் குணசேகரன். அத்துடன் இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.