ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவிடம் இருந்து ரவுடிகள் குழந்தையை கடத்த முயற்சி செய்ய அவன் ரவுடிகளை அடித்து விரட்டி குழந்தையை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது தீபா குழந்தையை பராமரித்துக் கொண்டிருக்க அப்போது ஸ்டேஷனிலிருந்து ஒரு போன் கால் வருகிறது. ஒரு குழந்தையை காணவில்லை நீ கம்பளைண்ட் வந்திருக்கு.. உங்ககிட்ட இருக்கும் குழந்தையாக தான் இருக்கும் என்று சொல்ல தீபா குழந்தையை கொண்டு வந்து தருவதாக சொல்கிறாள்.
மறுபக்கம் ரவுடிகள் தாராவுக்கு ஃபோனை போட்டு குழந்தையை தூக்கிட்டோம் ஆனா திரும்பவும் குழந்தை கையை விட்டு போயிடுச்சு என்று சொன்ன தாரா அந்த குழந்தை என்கிட்ட வந்து ஆகணும் இல்லனா உங்க ரெண்டு பேர உசுரோட விடமாட்டேன் என்று மிரட்ட அவர்கள் கண்டிப்பாக குழந்தையை உங்ககிட்ட ஒப்படைக்கிறோம் என்று வாக்கு கொடுக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தீபா காரில் குழந்தையுடன் வந்து கொண்டிருக்கிற ரவுடிகள் எதிரே வந்து ஆக்சிடென்ட் செய்து குழந்தையை கடத்தி தூக்கி செல்கின்றனர். தீபா ரவுடிகளை துரத்த ரவுடிகள் குழந்தையை ஒரு ஆட்டோவில் போட்டுவிட்டு எஸ்கேப் ஆக கடைசியில் அதே ஆட்டோ ஸ்டாண்ட் தலைவி பொம்மி என்பது தெரிய வருகிறது.
ஆட்டோ ஸ்டாண்டில் எல்லோரும் பொம்மிக்காக காத்திருக்க பொம்மி வந்ததும் அவருக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தி ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடுகின்றனர். இந்த சமயத்தில் ரவுடிகள் குழந்தையை தூக்க முயற்சி செய்ய அதை பார்த்த பொம்மி ரவுடிகளை ஓடவிட்டு குழந்தையை காப்பாற்றுகிறார்.
யாருடைய குழந்தைன்னு தெரியல போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள். மறுபக்கம் சூர்யாவை ஸ்டேஷனில் சந்தித்த தீபா நடந்த விஷயத்தை சொல்லி குழந்தையை கண்டிப்பா கண்டுபிடித்து தருவோம் என்று சொல்ல சூர்யா ஏமாற்றத்துடன் கிளம்பி செல்கிறான். மறுபக்கம் மாரி கோவிலில் கூடிய சீக்கிரம் குழந்தை கிடைத்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்க அங்கு தனது சிறுவயது தோழி மீனாவை சந்திக்கிறார்.
மீனாவும் சென்னையில்தான் இருப்பதாக சொல்ல மாரி அப்புறம் ஏன் என்னை இவ்வளவு நாளா பார்க்க வரல என்று கேள்வி கேட்க மீனா நாங்க லவ் பண்றோம் பிரச்சனைல இருந்தோம் இன்னும் எங்களுக்கு குழந்தை பிறக்கல என்று சொல்ல மாரி இந்த கோவிலில் தொட்டில் கட்டினால் குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்று சொல்கிறாள். இதய கோவிலில் வெளியே காத்திருக்கும் சகுந்தலாவின் அம்மா தாராவுக்கு போன் போட்டு நான் அனுப்புன ரவுடிகள் எப்படி வேலையை கச்சிதமா முடிச்சுட்டாங்களா என்று கேள்வி கேட்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.