Maari: சூர்யாவுக்கு ஜாஸ்மினை திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் தாரா.. எதிர்பார்ப்பு நடக்குமா?

மாரி சீரியலில் சூர்யாவுக்கு ஜாஸ்மினுக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸில் தாரா திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

மாரி சீரியலில் சூர்யாவுக்கு ஜாஸ்மினுக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸில் தாரா திருமணம் செய்து வைக்க முயற்சிக்கும் காட்சிகள் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

மாரி சீரியல்:

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

முன்னதாக கோயிலுக்கு செல்லலாம் என சொல்லிவிட்டு தாரா சூர்யாவை ரிஜிஸ்டர் ஆபீஸூக்கு அழைத்து வருகிறார். இங்கு ஏன் வந்தோம் என சூர்யா கேட்க, தாரா தனியே அழைத்து திருமண விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சூர்யா, மாரிக்கு தெரியாமல் பண்ணா தப்பா போயிடும் என முடிவு செய்து அவரிடம் சொல்ல முடிவெடுக்கிறார். 

இன்றைய எபிசோடில் ரிஜிஸ்டர் ஆபீஸில் இருக்கும் சூர்யா மாரியிடம் தனக்கும் ஜாஸ்மினுக்கும் அம்மா திருமணம் செய்து வைக்கப் போகும் விஷயத்தை சொல்ல மாரி வருத்தம் அடைகிறாள்.

அதன் பிறகு தாரா சூர்யாவுக்கு புது ஆடைகளை கொடுத்து அனுப்பும் போது அப்போது அங்கு வரும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் அனைவரையும் பார்த்து சிரித்து விட்டுப் போகிறான். மறுபக்கம் மாரி ரூமில் சூர்யா சொன்னதை நினைத்து வருத்தப்பட்டு இருக்க, ஹாசினி என்ன காரணம் கேட்கிறார். உடனே ரிஜிஸ்டர் ஆபீஸில் திருமணம் நடக்கும் விஷயத்தை மாரி சொல்ல,, அதிர்ச்சியடையும் ஹாசினி, வீட்டில் உள்ள அனைவரிடமும் விஷயத்தை சொல்கிறாள். இதனால் ஜெகதீஷ் கோவப்பட மாரி அவரை தடுக்கிறாள்.

ஆனால் ஜெகதீஷ் துப்பாக்கியை எடுத்துட்டு போய் இப்பவே தாராவை கொன்னுட்டு சூர்யாவை அழைத்து வருகிறேன் என டென்ஷனாக கூற, தயவு செய்து நீங்கள் எங்கேயும் போகாதீர்கள் என்று மாரி சொல்லி தடுக்கிறாள். அதனை தொடர்ந்து ரிஜிஸ்டர் ஆபீஸில் மாப்பிள்ளை சூர்யாவை உள்ளே அழைத்து ஆபீஸர் கையெழுத்து போட சொல்ல அவர் தயங்குகிறார். என்னாச்சு என ஆபீஸர் காரணம் கேட்க,  ஒன்னும் இல்லை என்று சமாளித்து தாரா சூர்யாவை கையெழுத்து போட சொல்கிறாள்.

இதற்கிடையில் வீட்டில் ஹாசினி சாமியிடம் திருமணம் நடக்கக்கூடாது என வேண்டுகிறாள். இந்த பக்கம் ஜெகதீஷ் தேவியிடம் வேண்ட, சூர்யா கையெழுத்து போட போகும் சமயத்தில் கரண்ட் கட் ஆகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola