Maari: ஜாஸ்மினை கைதுசெய்ய வீட்டுக்கு வரும் போலீஸ்.. அதிர்ச்சியில் மாரி..இன்றைய எபிசோட் இதோ..!

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.

Continues below advertisement

மாரி சீரியலில் ஜாஸ்மினை கைது செய்ய போலீஸ் வீட்டுக்கு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  முன்னதாக நேற்றைய எபிசோடில்ஜாஸ்மின், மாரி திட்டியதை நினைத்து பார்த்து மது குடிக்கிறார். பின்னர் போதையில் காரில் வரும்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். நான் தேவி குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஓனர் சூர்யாவின் மனைவி என்று சொல்லி போலீசை ஜாஸ்மின்  அடித்து விடுகிறார். 

அதை செய்தியாளர் படம் பிடித்து டிவியில் போட, அதை ஹாசினி பார்த்துவிட்டு சூர்யாவிடம் விஷயத்தை சொல்கிறார். மேலும் அவரை அழைத்துக் கொண்டு டிவியில் செய்தியை காட்ட நினைக்கிறார்.  இந்த விஷயம் அறிந்து சங்கர பாண்டி தாராவிடம் சொல்லி யாருக்கும் தெரியாமல் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்கிறார் ஆகிய காட்சிகள் இடம் பெற்றது. 

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில், ஜாஸ்மின் குடித்துவிட்டு போதையில் சூர்யா வீட்டுக்கு வருகிறார். அப்போது தாராவும் சங்கரப்பாண்டியும் யாருக்கும் தெரியாமல் ஜாஸ்மினை தனியாக அழைக்க அவர் போதையில் உளறுகிறார். அதை ரூமில் இருக்கும் சூர்யா கேட்டு விடுவானோ என்ற பயத்தில், யாருக்கும் தெரியாமல் அவரை தாரா தன் அறைக்கு அழைத்து சென்று தூங்க வைக்கிறார். ஆனால் ஜாஸ்மின் அங்கு தூங்காமல் தகராறு செய்கிறார்.

அவரின் அட்டகாசத்தை கவனிக்கும் ஹாசினி, சூர்யாவிடம் சொல்ல முடிவெடுத்து அவரது ரூமுக்கு சென்று அழைத்து வருகிறார். ஆனால் அதற்குள் தாரா ஜாஸ்மினை தூங்க வைத்து விடுகிறார். பின்னர் சூர்யா வந்து விசாரிக்க ஜாஸ்மின் தற்போது தான் வந்தா, தூங்கிக்கிட்டு இருக்கா என்று சமாளிக்க சூர்யா ரூமுக்கு சென்று விடுகிறான். இதனையடுத்து மறுநாள் காலை சூர்யா தன் டேபிள் அலமாரியை திறக்கும் போது அதில் இரண்டு ஜிமிக்கி இருக்கிறது. அதை பார்த்து சந்தோஷம் அடையும் அவர் ஜிமிக்கி நம்ம கிட்டயே வந்துருச்சு என நினைத்து அதை பார்த்து மாரி ரசிக்கிறார்.

இதற்கிடையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டுக்கு வந்து நேற்று இரவு ஜாஸ்மின் குடி போதையில் தன்னை அடித்த விஷயத்தை சொல்லி கைது செய்ய வந்ததாக சொல்கிறார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தும் மாரி இந்த குடும்ப மானம் போய்விடும். அதனால் தயவு செய்து அரெஸ்ட் பண்ணாதீங்க என்று சொல்கிறார். இதனைக் கண்டு சூர்யா மாரியை நினைத்து நெகிழ்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola