அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் சுமதி அமுதாவை மிரட்டும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல்


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். 


முன்னதாக அன்னலட்சுமியிடம் சொன்னபடி, அமுதா செல்வாவிடம் சுமதியை தன்னுடைய வீட்டில் வாழ அழைத்து வருவது பற்றி பேசுகிறார். இதில் சமரசம் ஏற்படும் நிலையில், சுமதி வடிவேலு இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். உள்ளே வரும்போது சுமதி அமுதாவிடம் உனக்கு இருக்கு என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி விட்டு செல்கிறார். இதைக் கண்டு அமுதாவுக்கு அதிர்ச்சியாகிறது. 


இதனிடையே இன்றைய எபிசோடில் சுமதி அமுதாவை மிரட்டியது மட்டுமல்லாமல் ரூமில் இடம் தர மறுத்து அவரை வீட்டு முற்றத்தில் படுக்க வைக்கிறார். புவனா செந்திலிடம் உதவி ஒன்று கேட்க வருகிறார். இதனைப் பார்க்கும் பரமு-சின்னா, வடிவேலு-சுமதி கிண்டலடிக்க செந்தில் மனவருத்தம் அடைகிறான். இதைக் கண்ட அமுதா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். 






மறுநாள் காலையில் செந்தில் காலேஜூக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறார். அப்போது அமுதா அவருடைய டிரஸ்சை அயர்ன் செய்து வைத்திருக்கும் நிலையில் செந்தில் அதை போடாமல் வேறு சட்டையை போடுகிறார். அதேபோல் சாப்பாடு ரெடி செய்து டிபன் பாக்ஸில் ரெடி செய்து வைத்த நிலையில் அதை எடுக்காமல் செந்தில் காலேஜூக்கு கிளம்புகிறார்.


இதன் பின்னர் காலேஜில் செந்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, HOD அவனை அழைக்க செந்தில் என்னவென்று கேட்கிறார். உடனே அவர் ஒன்றும் சொல்லாமல் ஒரு ரூமை திறக்கும் வேளையில், அங்கே அமுதா சாப்பாடு கொண்டு வந்து நிற்கிறார். இதனையடுத்து HOD அவனிடம் இவ்வளவு நாள் சாப்பிடாம அப்படியே படிச்சி கிழிச்சிட்டன்னு உன் பொண்டாட்டி உனக்கு கஷ்டப்பட்டு சாப்பாடு கொண்டு வந்திருக்கா. ஒழுங்கா சாப்பிடு என செந்திலை மிரட்டி சாப்பிட வைக்கிறார்.


HOD பேச்சை கேட்டு அமுதா சிரிப்பை அடக்கிக் கொள்ள, செந்தில் முறைத்தபடி சாப்பிடுகிறார். இதற்கிடையில்  செந்திலிடம் அமுதா புவனா விஷயத்தை சொல்லாமல் போனதற்கு காரணம் இருப்பதாக சொல்கிறார். அதாவது நீ வந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்பதால் தான் கூப்பிடவில்லை என சொல்கிறார். இதனால் செந்தில் சமாதானம் அடைகிறார். 


இதனிடையே குமரேசன் திருமணமான வடிவேலுக்கு சீர் கொண்டு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.