Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தேர்தலை தடுத்து நிறுத்த, சிவனாண்டி காளியம்மாவிடம் உதவி கேட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

காளியம்மாள் ஆட்களை அடித்து ஓடவிட்ட கார்த்திக்:

அதாவது சிவனாண்டி சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு போய் பணிவிடை வேலை எல்லாம் செய்ய முடியாது என்று சொல்ல காளியம்மாள் ரகசியமாக ஒரு திட்டத்தை சொல்கிறாள். 

இதனை தொடர்ந்து காளியம்மா ஏற்பாடு செய்த அடியாட்கள் ஸ்கூலில் இருந்து ஓட்டுக்கள் பதிவான பெட்டியை தூக்க திட்டம் போடுகிறாள். அடியாட்களின் பெட்டியை தூக்க பள்ளிக்குள் நுழைய, அரிவாளுடன் அங்கு காவலுக்கு காத்திருக்கும் கார்த்திக் எல்லோரையும் அடித்து ஓட விடுகிறான். இதனால் காளியம்மாவின் திட்டம் தோல்வியடைகிறது. 

கடற்கரைக்கு கூப்பிட்ட ரேவதி:

அதைத்தொடர்ந்து ஊரில் ஆடிமாத பௌர்ணமி தினத்தன்று வீட்டில் சமைத்த உணவை கணவன் மனைவி கடற்கரை நிலவு வெளிச்சத்தில் சாப்பிட்டால் கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கும் என்பது ஐதீகம் என்று சொல்கின்றனர். 

ரேவதி இந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்லி, பாட்டி தான் சொல்ல சொன்னதாக சொல்கிறாள். எனக்கு இதில் எல்லாம் உடன்பாடு இல்லை என்று சொல்லும் கார்த்திக், நானே பாட்டியிடம் கேட்கிறேன் என்று சொல்லித் திரும்ப ரேவதியும் பரமேஸ்வரி பாட்டிக்கு சைகை காட்ட பாட்டியும் ஆமாம் நான்தான் சொன்னேன் என்று சமாளிக்கிறார். 

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.