ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் தேர்தல் வேலைகள் நடந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, தேர்தல் நடக்க தொடங்க சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் இதனை கெடுக்க திட்டமிடுகின்றனர். கார்த்திக் மற்றும் ரேவதி பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வர பின்னாடி 3 சகோதரிகளும் வந்து இறங்குகின்றனர்.
கடன்காரனின் கையை உடைத்த காளியம்மாள்:
இன்னொரு பக்கம் சந்திரகலா, சிவனாண்டி ஆகியோர் காளியம்மா என்பவரை சந்திக்கின்றனர். அப்போது காளியம்மா கடன் வாங்கிய ஒருவரை வீட்டுக்கு அழைத்து சாப்பாடு போட்டு, அவன் சாப்பிடும்போது உலக்கையால் அவனது கையில் தாக்குகிறாள்.
சிவனாண்டி தனது சித்தியான காளியம்மாவிடம் தேர்தலை நிறுத்த உதவி கேட்க அவள் பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு வருவதாகவதாக சொல்கிறாள்.
கார்த்திக்கிற்கு முத்தம் தந்த ரேவதி:
இதனைத் தொடர்ந்து இங்கே வீட்டில் எல்லோரும் சேர்ந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆட ரேவதி கண்ணை கட்டிக்கொண்டு கார்த்தியை பிடித்து முத்தமிடுகிறாள். பிறகு பாட்டி என்று இவ்வாறு செய்துவிட்டதாக பொய் சொல்கிறாள்.
ரோகிணிக்கு தெரிந்த உண்மை:
அடுத்ததாக மீண்டும் கண்ணை கட்டிக்கொண்டு விளையாடும் போது துர்கா கழுத்தில் இருந்த தாலி வெளியே வர ரோகிணி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவளை அறைந்து விசாரிக்கும்போது கார்த்திக் நவீனுக்கும் அவளுக்கும் திருமணம் நடந்த விஷயத்தை செல்கிறான்.
இந்த பரபரப்பான சூழலில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பதை கீழே காணலாம்.