தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியின் மகள் தாத்தாவுடன் சேர்ந்து அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டு சந்தோஷமாக இருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கும்பாபிஷேகத்திற்கு எதிராக சதி:

அதாவது, இவர்கள் வீட்டுக்கு கிளம்பியதை தொடர்ந்து கார்த்திக் மற்றும் ராஜா சேதுபதி என இருவரும் ஜோதிடரை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கின்றனர். இதை மறைந்திருந்து பார்த்த முத்துவேல் மற்றும் சிவனாண்டி ஆகியோர் இந்த கும்பாபிஷேகம் எப்படி நடக்குதுன்னு பார்க்கிறோம் என  சதி திட்டம் தீட்ட தயாராகின்றனர்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்ததும், ரோகிணி ரேவதியிடம் நீ ராஜா சேதுபதி தாத்தா பேரன நீ கல்யாணம் பண்ணி இருந்து இருக்கலாம். அப்படி நடந்திருந்தா இந்த குடும்பம் ஒன்று சேர்ந்து இருக்கும் என்று சொல்ல ரேவதியும் அதைப்பற்றி யோசிக்க இதைக் கேட்ட சாமுண்டீஸ்வரி ரோகினியை திட்டி விடுகிறாள். 

Continues below advertisement

ஏலத்தில் வெல்லப்போவது யார்?

பிறகு கோவிலில் சாமி புடவைகள் ஏலத்திற்கு வர அந்த புடவையில் தான் ரேவதி நலங்கு பங்க்ஷன் நடக்க வேண்டும் என சொல்லி சாமுண்டீஸ்வரி மருதுவை அனுப்பி புடவையை ஏலம் எடுத்து வரச் சொல்கிறாள். தாத்தாவின் உத்தரவின் பேரில் கார்த்தியும் இதே ஏலத்திற்கு வருகிறான். 

மருது மற்றும் கார்த்திக் என இருவருக்கும் இடையே போட்டி உருவாக இறுதியில் ஏலத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.