ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சரஸ்வதி என்பவர் கார்த்தியை பார்க்க வர அருணாச்சலம் அதிர்ச்சியடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, அருணாச்சலம் சரஸ்வதியை வெளியே யாருக்கும் தெரியாமல் காத்திருக்க சொல்ல அருண் அவளை உள்ளே அழைக்க அப்போது உள்ளே வரும் சரஸ்வதி எதிர்பாராத விதமாக கார்த்தியின் மீது மோதி அவள் கையில் இருந்த சீடை, முறுக்கு எல்லாம் கீழே சிதற கார்த்தி பார்த்து வர மாட்டிங்களா என்று அவருக்கு உதவி செய்கிறான். இதனை பார்த்த அருணாச்சலம் என்ன ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க என்று அதிர்ச்சி அடைகிறார்.
மறுபக்கம் ரூபாஸ்ரீயின் பாட்டி கோகிலா தீபாவை ரூமில் சந்தித்து நான் உனக்கு போன் பண்ணதும் பாட ஆரம்பிச்சிடு என்று சொல்லி கொண்டிருக்க கீழே கார்த்தியை பார்க்க வந்த பிசினஸ் மேன் இருவர் கல்யாணத்துக்கே வர முடியல, அதனால் தான் இப்போ மீட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணிட்டு வந்திருக்கோம் என்று பேசுகின்றனர்.
மேலும் உங்க மனைவி எங்கே? இதுவரைக்கும் நாங்க பார்த்ததே இல்லை என்று கேட்க கார்த்திக் தீபாவை தேடி ரூமுக்குள் வர கோகிலா கதவு பின்னாடி ஒளிந்து கொள்கிறாள், கார்த்திக் தீபாவை முக்கியமான நபர்கள் உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க என்று கீழே கூட்டி செல்ல தீபாவை பார்த்ததும் ரூபாஸ்ரீ, தீபாவின் குடும்பம் என எல்லாரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கார்த்திக் நான் கேட்டு ரசித்த குரலை நீங்க எல்லாரும் கேட்கணும் என ரூபாஸ்ரீயை பாட சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.