ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர் காரர்கள் எல்லாரும் ஷண்முகம் வீட்டில் காத்திருக்க அவன் பரணியுடன் காரில் வந்து இறங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஷண்முகம் வீட்டுக்கு வந்ததும் ஊர் காரர்கள் உன் வீட்ல பொண்ணு எடுக்க எல்லாரும் தயங்கும் போது ஊர் பெரிய மனுஷன் சௌந்தரபாண்டி பொண்ணு எடுக்க வந்தாரு, நீயும் சம்மதம் சொல்லிட்டு வேணான்னு சொல்லுறது நல்லா இல்லை என்று சொல்ல ஷண்முகம் என் தங்கச்சியோட விருப்பம் என்னனு தெரியாமல் சம்மதம் சொல்லிட்டேன். அவளுக்கு விருப்பம் இல்லனு தெரிந்ததும் வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று சொல்ல ஊர் காரர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர்.
ஷண்முகம் இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்ல சனியன் இவன் கிட்ட என்ன பேச்சு, நாளைக்கு பஞ்சாயத்துல பேசிக்கலாம் கிளம்புங்க என்று சொல்லி எல்லாரையும் அனுப்பி வைக்கிறான். அடுத்து பரணியிடம் உங்க அப்பாவுக்கும் இவனுக்கு எவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருக்கு, உனக்கும் ஒரு நல்ல இடத்துல பேசி முடிச்சி இருக்காங்க, இப்போ இவன் கூட சுத்துறது நல்லது இல்லை என்று சொல்ல பரணி அதெல்லாம் எனக்கு தெரியும் போடா என்று அவனை துரத்தி விடுகிறாள்.
அடுத்து பரணி வீட்டுக்கு வர சனியன் எல்லா விஷயங்களை சொல்லி இருக்க சௌந்தரபாண்டி இங்க நடக்கிற எல்லா விஷயத்தையும் அவனுக்கு சொல்றது நீங்க தான் என்று பரணி, பாக்கியம் மற்றும் சிவபாலனிடம் போனை பிடிங்கி வைத்து கொள்கிறான், மேலும் வீட்டில் இருக்கும் லேண்ட் லைன் போனையும் தூக்கி போட்டு உடைக்கிறான்.
இங்கே வீட்டில் திடீரென வைகுண்டம் காணாமல் போக ஷண்முகம் பின்பக்கம் வந்து பார்க்க அங்கே அவர் அழுதபடி உட்கார்ந்து இருக்கிறார், பஞ்சாயத்தை நினைத்து பயமாக இருப்பதாக சொல்ல நம்ம பக்கம் நியாயம் இருக்கு என்று ஷண்முகம் ஆறுதல் சொல்கிறான்.அப்போது உங்க அம்மா நீங்க நினைக்கிற மாதிரி தப்பானவ கிடையாது, அவன் உண்மையான பத்தினி.. அவன் ஒரு நாள் இங்க வருவா, எங்க போய் இருந்தா, என்ன பண்ணிட்டு இருந்தானு எல்லா உண்மையும் சொல்லுவானு தான் இந்த உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கேன் என கலங்குகிறார். அதன் பிறகு ஷண்முகம் அம்மாவாக நினைக்கும் மரத்தை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறான்.