தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி சூளையை ஏலம் விட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சந்திரகலாவின் சதி:
அதாவது, சாமுண்டீஸ்வரி சூளையை ஏலம் விடும் விஷயம் கார்த்திக்கு தெரிய வந்து சூளையில் வேலை செய்பவர்களுக்காக சூளையை கைப்பற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறான்.
இதனை தொடர்ந்து சந்திரகலா யாரெல்லாம் இந்த ஏலத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதோ அவர்களை எல்லாம் சந்தித்து இந்த ஏலத்தை நாங்க எடுக்க போறோம். நீங்க பங்கேற்க வேண்டாம் என்று சொல்லி கேட்டு கொள்கிறாள்.
கார்த்தியின் சாமர்த்தியம்:
மேலும் அவர்களுக்கு பணத்தை கொடுத்து சம்மதிக்கவும் வைக்கிறாள். இதையடுத்து சந்திரகலா சந்தித்த நபர்கள் அனைவரும் கார்த்திக் ஏற்பாடு செய்தவர்கள் என்பது தெரிய வருகிறது.
அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி, சந்திரகலா ஆகியோர் ஏலத்திற்கு கிளம்ப அந்த கார்த்திக்கு பாடம் புகட்டுறேன் என்று ஆணவத்துடன் பேசுகிறாள். இதையடுத்து சந்திரகலா நான் ஏதோ பண்ணி இருக்கேன்.. ஆனால் அந்த கார்த்திக் புத்திசாலி ஏதாவது பண்ணவும் வாய்ப்பு இருக்கு என்று யோசிக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.