தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கான்ஸ்டபிள் பேத்தி, பரமேஸ்வரி என்பவருக்கு தாத்தா பற்றிய விஷயங்கள் தெரியும் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

புலம்பும் பரமேஸ்வரி:

அதாவது, பரமேஸ்வரி என்பவர் கான்ஸ்டபிளின் போட்டோவை வைத்து, "என்னை தங்கச்சி மாதிரி பார்த்துக்கிட்டிங்க.. உங்களால ஒரு குடும்பம் பெரிய இடத்திலே.. சொல்லுங்க அவங்ககிட்ட நான் எப்படி நடந்த விஷயத்தை சொல்றதனு தெரியல?" என்று புலம்பி கொண்டிருக்கிறார். 

மறுபக்கம் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வரும் ஊர்காரர்கள், திருவிழா நடத்த போவதாகவும் அதற்கான கோவில் நகைகளை உங்கள் வீட்டில் வைத்து கொண்டு செல்வதுதான் வழக்கம் என்று சொல்லி, நகையை கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு செல்ல சந்திரகலா இதை வைத்து திட்டமொன்று தீட்டுகிறாள். 

Continues below advertisement

சாமுண்டீஸ்வரிக்கு எதிராக சதி:

காளியம்மாவை சந்தித்து விஷயத்தை சொல்ல சூப்பர், இதை வைத்து சாமுண்டீஸ்வரி அழித்து விடலாம் என முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.