ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.


நேற்றைய எபிசோடில் குணாவுடன் நடந்த சிலம்ப போட்டியில் கார்த்திக் அவனை தோற்கடித்து வெற்றி பெற்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


கோவில் திருவிழாவில் அடுத்ததாக உறியடிக்கும் போட்டி தொடங்க குணா பானையில் ஆசிட்டை கலந்து வைத்து கார்த்தியை பழி வாங்க திட்டமிடுகிறான். பிறகு மைதிலி ஐஸ்வர்யா இருப்பதை பார்த்து அவளது பெயரை கோர்த்து விட்டு உறியடிக்க வைக்க ஐஸ்வர்யா ரூபாஸ்ரீயையும் கோகிலாவையும் அடித்து விடுகிறார்.


அடுத்து குணாவின் ஆட்கள் ஆயிரம் பொற்காசு இருக்கிறது என்று சொல்லி ஆசிட் கலந்த பானையை மேலே தூக்க வைக்க தீபாவின் குடும்பத்திலிருந்து உறியடிக்க வருகின்றனர். முதலில் மைதிலி முயற்சி செய்ய அவளும் கோகிலாவை அடிப்பது போன்று சென்று விடுகிறார்.



அடுத்து ஜானகி முயற்சி செய்ய அவர் கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறார்.  பிறகு தீபா உறியடிக்க முயற்சி செய்து வெற்றிகரமாக உரியையும் அடித்து விடுகிறார். ஆனால் தீபாவுக்கு ஒன்றும் ஆகாததால் குணாவின் ஆட்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.


இந்த நேரத்தில் கார்த்திக் என்ட்ரி கொடுத்து நீங்க பண்ண வேலையெல்லாம் எனக்கு தெரியும், அதனாலதான் ஐந்தாயிரம் பொற்காசு இருக்குன்னு சொல்லி நான் அப்பவே பானையை மாத்திட்டேன் என்று பிளாஷ்கட்டில் நடந்த விஷயங்களை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.




மேலும் படிக்க: En Uyir Thozhan Actor Babu: ஒரே சண்டை காட்சியால் முடிந்த சினிமா வாழ்க்கை.. நடிகர் ‘என் உயிர் தோழன்’ பாபு மரணம்..