தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரியை பரமேஸ்வரி பாட்டி வீட்டுக்கு சாப்பிட அழைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

பரமேஸ்வரி வீட்டில் சாப்பிடும் சாமுண்டீஸ்வரி:

அதாவது ஊர் மக்கள் எல்லோரும் போயிட்டு சாப்பிட்டு வாங்க என்று சொல்லி கட்டாயப்படுத்த சாமுண்டீஸ்வரி தவிர்க்க முடியாமல் பரமேஸ்வரி பாட்டி வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறாள். இதைப் பார்த்து ரேவதி, துர்கா, ரோகிணி என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். 

சாமுண்டீஸ்வரியின் இடுப்பை கிள்ளியவனுக்கு அறை:

சிவனாண்டி மற்றும் சந்திர கலா ஆகியோர் சாமுண்டீஸ்வரியை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். அடுத்ததாக சாமுண்டீஸ்வரி பிரச்சாரம் செய்யும்போது ஒருவன் மாலை போட வந்து சாமுண்டீஸ்வரி இடுப்பை பிடித்துக் கிள்ள சாமுண்டீஸ்வரி கோபப்பட்டு அவனை அறைகிறாள். 

ஆறுதல் சொன்ன மருமகன்:

இதனால் அந்த நபர் சுருண்டு கீழே விழ சிவனாண்டி இதை சாதகமாக பயன்படுத்தி சாமுண்டீஸ்வரி மீது புகார் அளிக்க  அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர். இதையடுத்து கார்த்திக் அங்கு வந்து இதுக்கு பின்னாடி இருக்கும் மர்மத்தை நான் கண்டுபிடிக்கிறேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்று சாமுண்டீஸ்வரிக்கு ஆறுதல் சொல்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை இன்று காணத்தவறாதீர்கள்.