ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலை நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவால் தீபாவின் புடவை பற்றி அறிய கார்த்திக் பாலை ஊற்றி காப்பாற்றிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது எல்லோரும் தீபாவை கொலை நினைத்தது யார் என பேசிக்கொண்டு இருக்க அப்போது அபிராமி இது அனைத்தும் சரவணன் வேலையாகத்தான் இருக்கும் என்று சொல்ல சரவணன் நான் எதுக்கு இப்படி செய்யணும் நான் கிடையாது அந்த பூசாரியோட சதியா இருக்கும் என்று கூறுகிறான்.காரணம் ஒவ்வொரு வருஷமும் அந்த பூசாரி வீட்டில் இருந்த சாமிக்கட்டி ஆடுறாங்க இந்த முறை தீபா அதுவும் வெளியூர் பொண்ணு என்பதால் அவருக்கு கோபம் இருந்திருக்கலாம் என்று பிளேட்டை மாற்றி விடுகிறான்.
அதன் பிறகு ஐஸ்வர்யா ரூமுக்குள் அமர்ந்து ஒவ்வொரு முறையும் இந்த தீபா எப்படியாவது தப்பிச்சிடுறா, இவளுக்கு ஏதாவது செய்யணும் என்று யோசித்துக் கொண்டிருக்க தீபாவளிக்கு நன்றாக பாட தெரியும் என்ற விஷயத்தை சொல்லி சிக்கலில் சிக்க வைக்கலாம் என திட்டம் போடுகிறாள்.இந்த நேரம் பார்த்து அங்கு தோன்றும் ஐஸ்வர்யாவின் மனசாட்சி அவளுக்கு வார்னிங் கொடுக்க பிறகு பரமேஸ்வரி பாட்டி இடம் சென்று மலருக்கும் தீபாவிற்கும் பாட்டு போட்டி வைக்கலாம் என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டியின் சம்மதம் தெரிவிக்கிறார்.
இப்படியான நிலையில் அடுப்பு வேகம் நடக்கப்போவது என்ன இந்த சவாலில் இருந்து தீபா தப்பிக்கப்போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.