ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி ஜோதிடரை வீட்டிற்கு வரை வைத்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது அபிராமி ஜோதிடரிடம் என்னுடைய மருமகளுக்கு தாலி பிரித்து போட வேண்டும், அதற்காக நாள் குறித்து கொடுங்க.. இவங்க இவரை வெள்ளிக்கிழமை நல்லா இருக்கிறதா சொன்னாங்க நீங்க பாத்து சொல்லுங்க என்று கேட்க ஜோதிடரும் அந்த நாளே நல்லா தான் இருக்கு, நீங்க தாராளமாக செய்யலாம் என்று சொல்கிறார்.
அதுமட்டுமில்லாமல் பரிகாரமாக பெண் வீட்டார் பொண்ணுங்கு 5 சவரன் நகையும் மாப்பிளைக்கு 10 சவரன் நகையை போட்டு தான் இந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என்று அதிர்ச்சியையும் கொடுக்க மறுக்க முடியாமல் சம்மதம் சொல்கிறார் தர்மலிங்கம். அதனை தொடர்ந்து அவர் பணத்திற்காக ஊரில் இருக்கும் ஒருவருக்கு போன் செய்து கேட்க அவர் நீ எனக்கு ஏற்கனவே 1 லட்சம் ரூபாய் தரனும், இன்னும் எப்படி பணம் தர முடியும் என கேட்க இவர் சூழ்நிலையை எடுத்து சொல்ல அவர் சரி நான் என்னனு பார்த்துட்டு சொல்றேன் என போனை வைக்கிறார்.
இதனால் தர்மலிங்கம் இன்னொருவருக்கு போன் செய்து பணத்தை கேட்க அவர் உனக்கெல்லாம் எப்படி பணம் தர முடியும், அதெல்லாம் தர முடியாது என்று அவமானப்படுத்துகிறார். இதையெல்லாம் பார்த்த கார்த்திக் கவலைப்படாதீங்க பணம் நான் தரேன் என்பது போல சொல்ல தர்மலிங்கம் அதெல்லாம் வேண்டாம் தம்பி என்று மறுப்பு தெரிவிக்கிறார். பிறகு ஏற்கனவே கடன் கொடுத்தவரே போன் செய்து தன்னுடைய ஆள் ஒருவரிடம் பணம் கொடுத்து அனுப்புவதாக சொல்ல தர்மலிங்கம் சந்தோசம் அடைகிறார்.
இதனையடுத்து இவர்கள் எல்லாரும் ஷாப்பிங் கிளம்ப அபிராமி கோவிலுக்கு சென்றிருக்க கார்த்திக் ஐஸ்வர்யாவிடம் அம்மா வந்தா சொல்லிடுங்க என்று சொல்லி கிளம்ப கார்த்திக், தீபா மட்டும் ஒரு காரில் செல்ல மற்றவர்கள் வேறொரு காரில் மாலுக்கு செல்கின்றனர். தீபா முகத்தில் இதுவரை இல்லாத சந்தோசத்தை பார்க்கும் கார்த்திக் காரணம் கேட்க தீபா உண்மைகள் வெளியே வந்தது, தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி நடக்க போவது போன்ற விஷயங்களை சொல்லி சந்தோசப்படுகிறாள்.
அடுத்து ஐஸ்வர்யா இங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆட்டோவில் கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.