தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், சந்திரகலாவை கோவிலில் கட்டி வைத்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வெளிநாட்டு மாப்பிள்ளையை இறக்கிய சந்திரகலா:
அதாவது, சந்திரகலாவை இரவு முழுக்க கோவிலில் கட்டி வைத்திருந்த அவள் எனக்கு சரியாயிடுச்சு என்று சொன்னதும் அடுத்த நாள் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.
என்னை இந்த நிலைமைக்கு கொண்டு போன கார்த்தி ரேவதியை சும்மா விடக்கூடாது என சந்திரகலா முடிவெடுக்கிறாள். அதை தொடர்ந்து ரேவதிக்காக ஒரு மாப்பிள்ளை பார்ப்பதாக சொல்லி வெளிநாட்டில் இருந்து ஒருவனை இறக்குகிறாள் சந்திரகலா.
என்ன செய்யப்போகிறார் கார்த்தி?
கணவன் கார்த்திக் இருக்கும்போது, புது மாப்பிள்ளையை சந்திரகலா இறக்கியதால் என்ன நடக்கப்போகிறது? என்ற பரபரப்பு உருவாகியுள்ளது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
