தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சந்திரகலாவை பேயை வைத்து பயம் காட்ட முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
பயத்தில் சந்திரகலா:
அதாவது, சத்தம் போட்டு சந்திரகலாவுக்கு பயம் காட்ட அவள் சாமுண்டீஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி எனக்கு ஒன்னும் சவுண்ட் கேட்கலையே என்று சொல்லி அனுப்புகிறாள். அடுத்த நாள் காலையில் மீனாட்சி பால் கொண்டு வந்து கொடுக்க, சந்திரகலா சிவப்பாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
வீட்டில் இருப்பவர்களிடம் காட்ட எல்லாரும் பால் வெள்ளையாக தானே இருக்கு என்று சொல்கின்றனர். அடுத்து குளிக்க சென்று குழாயை திறக்க தண்ணீர் சிவப்பு நிறத்தில் வர பயம் கொள்கிறாள். அடுத்து ஒரு கொரியர் வர அதில் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகலானா செத்து போய்டுவ என்று எழுதி இருக்க மேலும் அதிர்ச்சி அடைகிறாள்.
அந்த பேப்பரை சாமுண்டீஸ்வரியிடம் காட்ட வெறும் வெள்ளை தாளாக இருக்க மேலும் ஷாக் ஆகிறாள். தொடர்ந்து சந்திரகலா ரூமில் விஷம், தூக்கு கயிறு ஆகியவை இருக்க எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். சைக்கலாஜி டாக்டராக மயில்வாகனம் மாறுவேடத்தில் வருகிறான்.
சாட்டையடி:
இதை மருந்து மூலமாக குணப்படுத்த முடியாது. ஆன்மீக முறையில் குணப்படுத்த பாருங்க என்று சொல்ல ராஜராஜன் ஒரு கோவிலை சொல்கிறார். பிறகு சந்திரகலாவை அந்த கோவிலுக்கு அழைத்து வர இப்பொது மயில்வாகனம் சாமியார் வேடத்தில் வருகிறான்.
சந்திரகலா உடம்பில் மோகினி இறங்கி இருக்கு.. ரத்த பந்தம் கொண்டவங்க சாட்டையால் அடிச்சா தான் சரியாகும் என்று சொல்ல சந்திரகலா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.