தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மகேஷை மீட்டு தர சொல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சாமுண்டீஸ்வரி வீட்டில் போலீஸ்:

அதாவது, சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லாரும் இருக்கும் போது மாயாவுடன் அங்கு வரும் போலீஸ், மகேஷ் காணாமல் போனது குறித்து விசாரிக்க வேண்டும் என்று சொல்ல கார்த்திக் சாமுண்டீஸ்வரி ஆகியோர் எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கின்றனர். 

மாயா பொய் சொல்றாங்க.. கைது பண்ணி விசாரிங்க என்று ஆவேசமாக சொல்கிறாள். போலீஸ் அப்படியெல்லாம் அவசர அவசரமாக எதுவும் பண்ண முடியாது என்று பதில் கூறியதால், மாயா சோகத்துடன் கிளம்பி செல்கிறாள். பிறகு கார்த்திக் டாக்டரை சந்தித்து கூடிய சீக்கிரம் மகேஷ் சரியாகணும், இதுக்கும் ரேவதிக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லணும் என்று சொல்கிறான்.

மைதிலியில் சில்மிஷம் செய்த முத்துவேல்:

இதனை தொடர்ந்து மைதிலி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்க முத்துவேல் அவளை தவறாக தீண்டுகிறான். இந்த விஷயம் ரேவதிக்கு தெரிய வர அவள் கார்த்தியிடம் சொல்கிறாள். அப்போது, இதை நான் கவனிக்கிறேன் என்று கார்த்திக் சொல்கிறாள். 

மைதிலி கார்த்திக்கு தெரிந்தால் என்ன செய்வது என்ற பதற்றம் உருவானாலும், ஒரு கட்டத்தில் தெரிந்தால் சமாளித்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வருகிறாள். தொடர்ந்து கார்த்திக்கு அபிராமிக்கு திதி கொடுக்க இரண்டு நாள் அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்ல இதை சந்திரகலா கேட்டு விடுகிறாள். 

கார்த்தியை எப்படியாவது சாப்பிட வைத்து விட வேண்டும் என்று திட்டம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.