தமிழ் சின்னத்திரையில்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலில் பூஜை முடிந்ததும் கார்த்தி பரமேஸ்வரி பாட்டி ஹாஸ்பிடல் அழைத்துச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க 

Continues below advertisement

அதாவது கார்த்தி லேட் ஆக வர சாமுண்டீஸ்வரி என்ன ஆச்சு மாப்பிள்ளை என்று கேட்க, பரமேஸ்வரி பாட்டிக்கு கத்திக்குத்து நடந்த விஷயத்தை சொல்ல இது மாப்பிள்ளைக்கு போடப்பட்ட திட்டமாக இருக்கலாம் என சந்தேகமடைகிறாள். 

குழப்பமான சாமுண்டீஸ்வரி:

அதன் பிறகு இந்த கும்பாபிஷேகம் நல்லபடியாக நடந்து முடியும் என்று கார்த்திக் சொல்கிறான். சாமுண்டீஸ்வரி சரிங்க மாப்ள பார்க்கலாம் என்று சொல்கிறாள். பரமேஸ்வரி பார்ட்டிக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல கார்த்திக் அங்கு கிளம்பி செல்கிறான். 

Continues below advertisement

இதை அறிந்த சாமுண்டீஸ்வரியும் பின்தொடர்ந்து செல்ல பரமேஸ்வரி பாட்டி கார்த்தியிடம் என் பேத்தியை கட்டிக்கிட்டதினால நீயும் எனக்கு பேரன் மாதிரி தான்.. என் சொந்த பேரன் மாதிரியே நடந்துக்கிற என்று சொல்ல சாமுண்டீஸ்வரி குழப்பமடைகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.