தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வர இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் 50 கோடி ரூபாய் பணத்தை கொடுத்து ஆவணங்களை கைப்பற்றிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

50 கோடிக்கு 5 லட்சம் கொடுத்த கார்த்திக்:

அதாவது சேட்டு பணப்பையை திறந்து பார்க்க அதில் 5 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே இருக்கிறது. மீதி அனைத்தும் காகிதங்களாக இருக்க கார்த்தியிடம், பணம் எங்கே? என்று கேட்கிறான். "நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணமும் வட்டியும் சேர்த்து அதுல இருக்கு, என்னால அவ்வளவுதான் கொடுக்க முடியும்" என ஷாக் கொடுக்கிறான். 

"போலீசுக்கு போறதுன்னா கூட தாராளமா போங்க, ஆனா மாட்டுவது நீங்களா தான் இருப்பீங்க" என செக் மேட் வைக்க சேட்டு எதுவும் செய்ய முடியாமல் கிளம்பி செல்கிறான். 

சாமுண்டீஸ்வரியை ஏற்றிவிடும் சந்திரகலா:

இதைத்தொடர்ந்து நினைவிடம் அமைக்கும் இடத்தை சுத்தம் செய்யும் வேலைகள் நடக்கிறது. மயில்வாகனம் "சாமுண்டீஸ்வரி அத்தை நினைவிடத்தை திறந்து வைப்பார்களா?" என்று கேட்க கண்டிப்பா வருவாங்க ஏதாவது செய்யலாம் என கார்த்தி சொல்கிறான். 

மறுபக்கம் சந்திரகலா சாமுண்டீஸ்வரியை ஏற்றி விட, அவள் என்ன நடந்தாலும் கண்டிப்பா நான் அந்த நினைவிடத்தை திறந்து வைக்க போக மாட்டேன் என சபதம் எடுக்கிறாள். சிவனாண்டி, முத்துவேல் ஆகியோர் அபிராமி நினைவிடம் அமைக்கும் இடத்தில் பாம் வைக்க திட்டமிடுகின்றனர். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.