தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்தி ரேவதியை ஜெயிலுக்குள் சந்தித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

துப்பாக்கியைத் தூக்கிய சாமுண்டீஸ்வரி:

அதாவது, சந்திரகலா கார்த்தியிடம் சவால் விட்டதை தொடர்ந்து செய்தித்தாளில் வந்திருக்கும் செய்திகளை சாமுண்டீஸ்வரியிடம் காட்டி அதற்கு காரணம் கார்த்தி தான் என ஏற்றி விடுகிறாள். 

பிறகு கார்த்திக்கும் சாமுண்டீஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் உருவாக சாமுண்டீஸ்வரி துப்பாக்கியை தூக்கி கார்த்திகை நெற்றியில் வைக்க, கார்த்திக் எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.. எங்கேயோ தப்பு நடந்திருக்கு அத நான் கண்டுபிடிக்கிறேன் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி அதை ஏற்க மறுக்கிறாள். 

Continues below advertisement

நம்பிக்கையுடன் ரேவதி:

பிறகு அங்கு வந்த ராஜராஜன் சாமுண்டீஸ்வரி சமாதானம் செய்து துப்பாக்கியை கீழே இறங்குகிறார். பிறகு ரோகினி ரேவதியை சந்தித்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல, கார்த்திக் கூடிய சீக்கிரம் என்ன வெளியில் எடுத்து விடுவாரு என்று சொல்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.