மிகவும் பிரபலமான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரேவதிக்கு நலங்கு வைக்கும் விழா தொடங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
நலங்கு வைத்த கார்த்திக்:
அதாவது, இன்னும் ஒருவர் நலங்கு வைக்க வேண்டும், அது கார்த்தியாகவே இருக்கட்டும் என்று நலங்கு வைக்க கூப்பிட, மாயா தடுத்து நிறுத்தி யாரோ ஒருத்தர் வைக்கிறதுக்கு மாப்பிள்ளை மகேஷ் நலங்கு வைக்கட்டும் என்று சொல்லி அவனுக்கு போன் போட்டு வர சொல்கிறாள்.
மகேஷ் வரும் வழியில் வண்டி பஞ்சர் என அடுத்தடுத்து தடை உருவாகி, மகேஷ் லேட்டாக இங்கே கார்த்தியையே நலங்கு வைக்க சொல்கின்றனர், பிறகு நலங்கு வைத்த கார்த்திக் ரேவதிக்கு ஜெயினையும் கொடுக்க அதை பார்த்து, சந்திரகலா எல்லாத்தையும் திட்டம் போட்டு தான் பண்றியா என்று சத்தம் போடுகிறாள்.
மாயா போட்ட ஸ்கெட்ச்:
அடுத்து மாயா பணத்தேவை இருக்கும் ஒரு காதல் ஜோடியை கூப்பிட்டு, கார்த்திக் ரூமுக்கு சென்று அவன் கெடுத்து விட்டதாக வெளியே ஓடி வர வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு அந்த பெண் கார்த்திக் ரூமுக்குள் செல்ல, இதை ராஜராஜன் பார்த்து விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் அந்த பெண் கார்த்திக் தன்னை கெடுத்து விட்டதாக சொல்லி சத்தம் போட்டபடி வெளியில் வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.