Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் புதையலுக்கு பதிலாக கல்லும் மண்ணும் இருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

கார்த்திக் மீது திரும்பிய பழி:

அதாவது, சிவனாண்டி ஆகியோர் சாமுண்டீஸ்வரி மீது திருட்டுப் பழியை கட்டி அனுப்பி வைக்கின்றனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த சந்திரகலா நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

பிறகு இது எல்லாத்துக்கும் காரணம் கார்த்திக் தான் என கார்த்திக் மீது பழி போட ராஜராஜன், மயில்வாகனம் ஆகியோர் கார்த்திக் இப்படி எல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை எனவே சொல்கின்றனர். கார்த்திக் எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நீங்க தான் ஏதோ பிளான் பண்ணி பண்ணியிருக்கீங்க என வாக்குவாதம் செய்கிறான். 

Continues below advertisement

இங்கே சிவனாண்டி ஒருவனை ஏற்பாடு செய்து அவனைப் பிடித்து அடிக்க அவன் கார்த்திக் தான் இப்படி செய்ய சொன்னதாக சொல்கிறான். மேலும் சந்திர கலா வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டவும் அதில் கார்த்தி இந்த ரவுடியிடம் பையை கொடுப்பது போல இருக்க ஊர்க்காரர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். 

ரேவதி கைது:

பிறகு அங்கு வந்த போலீஸ் புதையல் இருக்குன்னு சொன்னீங்க எங்கே என்று கேட்க, சாமுண்டீஸ்வரி புதையலை காணவில்லை கார்த்தி மீது தன் சந்தேகமாக இருப்பதாக கை காட்ட ரேவதி அதை நான் தான் எடுத்தேன் என்று சொல்ல போலீஸ் அவளை கைது செய்கிறது. 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.