தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நாட்டு வெடிகுண்டு என்று தெரியாமல் கார்த்திக் நெருப்பு வைக்க சென்ற நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

மயக்கம் போட்ட ரேவதி:

அதாவது கார்த்திக் நெருப்பு வைக்க போகும் சமயத்தில் ரேவதி திடீரென எனக்கு உடம்பு முடியல என்று மயங்கி விழ போக கார்த்திக் ஓடிவந்து தாங்கிப் பிடிக்கிறான். அடுத்ததாக கார்த்திக் அங்கிருக்கும் ஒரு லாக்கெட்டை எடுத்துப் பார்க்க அதில் முத்துவேலின் போட்டோ இருப்பதை கவனிக்கிறான். 

கார்த்திக் தந்த வார்னிங்:

சாமுண்டீஸ்வரி நாட்டு வெடிகுண்டை வெடிக்கப் போக அத்தை ஒரு நிமிஷம் என்று தடுத்து நிறுத்துகிறான் கார்த்தி. இதெல்லாம் முத்துவேலின் வேலை என்று சொல்லி அந்த வெடிகுண்டை எடுத்துக் கொண்டு முத்துவேல் மற்றும் சிவனாண்டி இருக்கும் இடத்திற்கு வந்து வெடிக்க இருவரும் கருகிப் போகின்றனர். பிறகு சந்திர கலாவை அழைத்து கார்த்திக் வார்னிங் கொடுக்கிறான். 

Continues below advertisement

உண்மையை உடைத்த கார்த்திக்:

பிறகு சாமுண்டீஸ்வரியிடம் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும் என்று சொல்லி நான் தான் ராஜா சேதுபதி ஓட பேரன் என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். மேலும் கார்த்தியை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல ரேவதி நானும் அவரோடு சேர்ந்து வீட்ட விட்டு வெளியே போயிடுவேன் என்று சொல்கிறாள். 

சாமுண்டீஸ்வரி நீ வீட்டை விட்டு வெளியே போனா, நான் சுட்டுகிட்டு செத்துப் போயிடுவேன் என்று மிரட்டுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.